கலைஞரின் சட்டமன்ற உரைகள்
523
16-12-2000 அன்று கடிதம் எழுதியிருக்கிறது என்பதையும் நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். 3.1.2001 அன்று மத்திய அரசு அதைப்பற்றி வேறு சில விவரங்களைக் கேட்டு, கடிதம் அனுப்பியிருக்கிறது. அந்த விவரங்களும் அனுப்பப்பட்டு இருக்கிறது என்பதையும் நான் தெரிவித்துக்கொண்டு, இந்தப் பிரச்சினைக்கு இனியாவது ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று நண்பர்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
விவசாயிகளைப் பொறுத்தவரையில் இந்தியாவிலேயே முதன்முதலாக 1990ஆம் ஆண்டுதான் 16 இலட்சம் மோட்டார் பம்புசெட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது என்பதை நீங்கள் அனைவரும் மறந்திருக்க முடியாது. 1995-96இல் நெல் கொள்முதல் குவிண்டால் ஒன்றிற்கு மோட்டா ரகம் 360 ரூபாய், சன்ன ரகம் 375 ரூபாய், 1.9.2000 முதல் குவிண்டால் ஒன்றிற்கு மோட்டா ரகம் 510 ரூபாய், சன்ன ரகம் ரூபாய் 540 ரூபாய், மத்திய அரசு நிர்ணய விலையை விட குவிண்டால் ஒன்றிற்கு 40 ரூபாய் இடைநிகழ் செலவாக அரசு வழங்கி வருகிறது. இது ஏகபோக கொள்முதலாக இருக்குமே யானால் 50 ரூபாய் வழங்கப்படுகிறது. இரண்டாம்தர நெல்லுக்கு, தர வெட்டுத்தொகை ரூபாய் 15 லிருந்து 5 ரூபாயகவும் மூன்றாம்தர நெல்லுக்கு 20 ரூபாயிலிந்து 10 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மைய அரசு நிர்ணய விலையைவிட முந்தைய அரசினால் கரும்பு டன் ஒன்றிற்கு ரூபாய் 50, ரூபாய் 60 என்ற அளவிலேயே விலையை உயர்த்தி பரிந்துரை விலை நிர்ணயிக்கப்பட்டு வந்தது ஆனால், இந்த அரசுதான் மைய அரசு நிர்ணயித்த விலையைவிட டன் ஒன்றிற்கு ரூபாய் 180 கூடுதலாக பரிந்துரை விலையை நிர்ணயித்து உள்ளது.
சர்க்கரைக் கட்டுமானத்தைப் பொறுத்து, 8.5 விழுக்காடு சர்க்கரை கட்டுமானம் கொண்ட கரும்பு டன் ஒன்றிற்கு 1995-96இல் முந்தைய அரசு பரிந்துரை விலை ரூபாய் 560. தற்போது கழக அரசு பரிந்துரை விலை ரூபாய் 740. 10 விழுக்காடு சர்க்கரை கட்டுமானம் கொண்ட கரும்பு டன் ஒன்றிற்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
கரும்பு பயிர்க் கடன், கூட்டுறவுக் கடன் கரும்பு விவசாயி ஒருவருக்கு 45 ஆயிரம் என்பது 55 ஆயிரமாகவும்,