உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

63

அவையினுடைய பெருமையைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நான் எடுத்துக்கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதைப் போலவே இந்த அவையினுடைய முன்னவர்

தெரிவித்திருக்கிறார்கள்.

அவர்கள் ஒரு கருத்தைத் அவருக்கும் எனக்கும் எத்தனை ஆண்டுக்கால பழக்கம், எவ்வளவு பாசம், எவ்வளவு அன்பு இவைகள் எல்லாம் இடையிலே ஏற்பட்ட அரசியல் புயல் காரணமாக, சில கருத்து மாறுபாடுகள் ஏற்பட்டிருந்தாலும், காரசாரமாக சொற்கள் வீசப்பட்டிருந்தாலும், மறந்துவிட முடியாதவை. ஆனால் அவரும் இந்த அவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பேசுகிறபோது ஒரு கருத்தைச் சொல்லி அண்ணா” யிருக்கிறார். அவருடைய பேச்சு 31.3.1985 பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது. அறநிலையத்துறை அமைச்சர், என்னுடைய அன்பிற்குரிய மாண்புமிகு திரு. வீரப்பன் அவர்கள் பேசியிருக்கிறார். “மேலவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பெரியவர் திரு. இராகவானந்தம் அவர்கள் பேசினார். புரட்சித் தலைவர் ஆட்சியில் தொழிலாளர்களுக்காகச் செய்த நன்மைகளை எடுத்துக் கூறி அழகாகப் பேசுகிறார். அப்போது கருணா ாநிதி - விதவை போல் உட்கார்ந்திருக்கும் கருணாநிதி, இவ்வளவு நல்ல காரியங்களைத் தொழிலாளர் நல அமைச்சராக இருந்து செய்ததால்தான் உங்கள் பதவி பறிக்கப்பட்டதா என்று கேட்கிறார்.”

நான் அன்றைக்கு பெருமதிப்பிற்குரிய நண்பர் திரு. இராகவானந்தம் அவர்களைப் பார்த்து "பதவி பறிக்கப் பட்டதா" என்றுகூட கேட்கவில்லை. “தொழிலாளர் நல அமைச்சராக இருந்து இவ்வளவு நல்ல காரியங்களைச் செய்த உங்களுக்கு இதுதான் பரிசா?" என்று கேட்டேன். அது எதுவானாலும் சரி, அப்போது அவையிலே உட்கார்ந்திருந்த கருணாநிதி என்று சொல்லியிருந்தாலும்கூட பரவாயில்லை. திரு. இராகவானந்தம் பற்றி நான் சொன்ன கருத்து தவறானது என்று விமர்சிப்பதற்கான உரிமை அவருக்கு உண்டு. ஆனால் அப்போது கருணாநிதி -விதவைபோல உட்கார்ந்திருக்கும் கருணாநிதி என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பது இந்த