உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

நிதிநிலை அறிக்கை மீது

ஏதோ

அவையில் உட்கார்ந்திருப்பவர்கள் எல்லாம் விதவைகள் என்பதைப் போலவும், விதவைகள் என்றாலே அவர்கள் ஏதோ வெறுக்கத்தக்கவர்கள், சமுதாயத்தில் வேண்டப்படாதவர்கள் அல்லது அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் என்கிற அளவுக்கு ஒரு இழிவான முறையில் என்னைக் குறிப்பிட்டதன் மூலம் இந்த அவையினுடைய பெருமை குறைக்கப் பட்டிருக்கிறது என்பதை எடுத்துக் கூறுவது என்னுடைய கடமையாக இருக்கிறது.

இவைகளை இங்கே எடுத்துச் சொல்லுவதற்குக் காரணம் என்னைப்பற்றி, என்னுடைய கருத்துக்களைப்பற்றி, நான் சார்ந்திருக்கிற இயக்கத்தைப்பற்றி எவ்வளவு கடுமையான விமர்சனம் செய்தாலும் பரவாயில்லை. ஆனால் நாம் அனைவரும் கலந்து பழகி கருத்துரைகளைப் பரிமாறிக் கொள்கிற இந்த அவையைக் குறித்து நான் ஏற்கெனவே குறிப்பிட்ட அத்தகைய பெரியவர்கள் எல்லாம் இருந்த இந்த அவையைக் குறித்து கற்றறிந்த சிலம்புச் செல்வரான தாங்கள் தலைமையேற்று நடத்துகிற இந்த அவையைக் குறித்து இனிமேல் இப்படிப்பட்ட விமர்சனம் வரக்கூடாது என்பதற்காகத்தான் சொல்கிறேனே தவிர வேறு அல்ல.

மாண்புமிகு திரு. இராம வீரப்பன் : மாண்புமிகு தலைவர் அவர்களே, நான் பேசியதாக ஒரு குறிப்பை, அண்ணா' பத்திரிகையில் வந்தது என்று குறிப்பிட்டு மாண்புமிகு உறுப்பினர் டாக்டர் கலைஞர் அவர்கள் இங்கே ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார்கள். அண்ணா' பத்திரிகையில் எப்படி வந்திருக்கிறது என்று நான் பார்க்க வில்லை. ஆனால் அன்றைக்குப் பேசுகின்றபோது இப்படிப் பேசவில்லை என்பதைத் திட்டவட்டமாக மறுக்கிறேன். மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் டாக்டர் காளிமுத்து அவர்கள் அந்தக் கூட்டத்திலே இருந்தார்கள். அந்த நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டு, அப்போது டாக்டர் கலைஞர் கருணாநிதி என்று குறிப்பிட்டுப் பேசியிருப்பேன். வெறும் கருணாநிதி என்று குறிப்பிடுவதில்லை. அடைமொழி யோடு பெரியவர்களைப் பற்றிக் குறிப்பிடும் வார்த்தைகளை பத்திரிகைகள் எப்போதும் அவரவர் விருப்பப்படி விட்டு விட்டு வெளியிடுகிறார்கள். எல்லா பத்திரிகைகளுக்கும் இது