கலைஞரின் சட்டமன்ற உரைகள்
அ
65
பத்திரிகை தர்மமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது - முரசொலி உட்பட. கருணாநிதி என்று போட்டிருந்தால், அப்படி நான் பேசவில்லை. அப்படி கருணாநிதி அவர்கள் விதவையாக அங்கே உட்கார்ந்திருக்கிறார் என்று இந்த அவையைப்பற்றிக் குறிப்பிடும்போது குறிப்பிடவில்லை. அங்கே ஆயிரக் கணக்காக கூடியிருந்தவர்களுக்குத் தெரியும். கலைஞர் அவர்கள் மறுத்து ஒரு கருத்தை வெளியிட்டார்கள். அதற்கு நம்முடைய முன்னாள் தொழிலாளர் நல அமைச்சர் அவர்கள் பதில் அளித்தார்கள் என்று புரட்சித் தலைவரை ஒப்பிட்டுப் பேசுகின்றபோது. திரு. இராகவானந்தம் அவர்களைப்பற்றி அந்தக் கருத்தை வெளியிட்டேனே தவிர, இங்கே குறிப்பிட்டதைப் போன்று 'அண்ணா' பத்திரிகையில் கருணாநிதி விதவை உணர்வோடு உட்கார்ந்திருக்கிறார்கள் என்று வந்திருந்தால் அது தவறு, அப்படி பேசப்படவில்லை. வேறு காரணத்திற்காக வேறு இடத்திலே ஒரு சொற்றொடரில் உவமானமாகப் பயன்படுத்தப்பட்டதை இணைத்து இங்கே போட்டிருக்கிறார்கள். இந்த அவையைக் குறித்தோ, இங்கே அமர்ந்திருக்கின்ற உறுப்பினர்களையோ அல்லது தலைவரைக் குறித்தோ தரக்குறைவாகப் பேசவில்லை, பேசுகின்ற எண்ணமும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்
கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, என்னுடைய கையில் இருப்பது கையில் இருப்பது 'அண்ணா' பத்திரிகை. அதிலே வந்திருப்பது தவறு என்று அமைச்சர் அவர்கள் சொன்னதற்குப் பிறகு, அதைப்பற்றி எதையும் பேசவிரும்ப வில்லை. அவருடைய கட்சியின் அதிகாரபூர்வமான ஏட்டில் தவறாக வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருப்பதை நான் மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன்.
மாண்புமிகு திரு. இராம. வீரப்பன் : கட்சியின் அதிகாரப்பூர்வமான ஏடு ஏடு அண்ணா'விலும் வருகிறது, இன்னுமொரு கட்சியின் அதிகாரப்பூர்வமான ஏடு 'முரசொலி' யிலும் வருகிறது. எல்லோரும் ஒரே உணர்வோடு பழகியிருந்த கருத்தை, அவர்களே ஒத்துக்கொண்டபடி, அரசியல் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்பதைப் பற்றிப் பழகிக் கொண்டிருக்கிற முறையில் இந்த உணர்வுகள்