கலைஞரின் சட்டமன்ற உரைகள்
67
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி உழவுத்தொழில் வளர்ச்சிக்கும் கைத்தொழில் பெருக்கத்திற்கும், பொறியியல் தொழில் மேம்பாட்டிற்கும், கூட்டுறவுத் துறையை ஒல்லும் வகை எல்லாம் பயன்படுத்திவந்ததை நல்லறிவு படைத்த நடுநிலையாளர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. கழக அரசு பாடுபட்டு வந்ததன் காரணமாகத்தான் 1966ல், 54 லட்சம் டன்னாக இருந்த உணவு உற்பத்தியை, 1976-ல் 80 லட்சம் டன்னாக பெருக்கிக் காட்ட முடிந்தது என்று 1976ஆம் ஆண்டு நாவலர் அவர்கள் 'முரசொலி' பத்திரிகையிலே கட்டுரை எழுதினார்கள். இன்றைக்கு அவர் தந்த நிதிநிலை அறிக்கையைப் படித்துப் பார்த்தாலும், அதிலே கூட இப்போதுள்ள அறிக்கையில், உணவு உற்பத்தி 80 லட்சம் டன் அல்லது 84 லட்சம் டன் என்கின்ற அளவுக்கு எதிர்பார்க்கப் படுகிறது என்றுதான் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்
மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : மாண்புமிகு மேலவைத்தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் டாக்டர் கலைஞர் அவர்கள் நான் பேசிய பேச்சுக்களைப் பற்றி இங்கே குறிப்பிட்டுப் பேசியிருக்கின் றார்கள். நான் பேசியது, 1967லே அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சி அமைத்தார்கள். 1976வது ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதியன்று, டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமையிலே இருந்த ஆட்சி வீழ்த்தப்பட்டது. அப்படி வீழ்த்தப்பட்ட ஆட்சியை மறுபடியும் புரட்சித் தலைவர் அவர்கள் தூக்கி நிறுத்தினார்கள் என்று சொன்னேனே தவிர, கலைஞர் தலைமையில் ஆட்சி சின்னாபின்னப்பட்டது என்ற கருத்தை நான் சொல்லவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால், நானும் அப்போது பொறுப்பிலே இருந்திருக்கிறேன். 1976 வரை நானும் இருந்திருக்கிறேன். அதை நான் எப்படிச் சொல்வேன் என்பதைச் சிந்திக்க வேண்டும். வீழ்ந்துவிட்டது. வீழ்ந்துவிட்ட அந்த ஆட்சியைத் தூக்கி நிறுத்தினார் என்ற அளவுக்குத்தான் சொன்னேன்.
மற்றொன்று, கலைஞர் அவர்கள் முதலிலே சொன்ன கருத்து பற்றி இப்போதே சொல்லிவிடலாம் என்று கருதுகிறேன். அவர்கள் எந்த அளவுக்கு மதிப்பு என்னிடம் வைத்திருக்கின்றார்கள். நான் அவரிடம் எந்த அளவுக்கு