உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

நிதிநிலை அறிக்கை மீது

மதிப்பு வைத்திருக்கிறேன் என்றும் நாங்கள் அறிவோம். அவர்களே எடுத்துச் சொன்ன மாதிரி அரசியல் விமர்சனம் செய்கின்ற சமயங்களில் சில கருத்துக்களை எடுத்துச் சொல்கிறோம். பட்டுக்கோட்டையிலே பேசியபோதுகூட, இந்த அவையைக் கேவலப்படுத்த வேண்டுமென்றோ, இந்த அவையை அவமானப்படுத்த வேண்டும் என்றோ நான் எதையும் எடுத்துச் சொல்லவில்லை. ஆனால் அவர் பொதுமக்களிடையே தேர்தலுக்கு நின்று, மக்களுடைய வாக்குகளைப் பெற்று, சட்டமன்றப் பேரவையிலே முதல் இடத்திலே உட்கார்ந்திருந்த கலைஞர் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழக 30 எம்.எல்.ஏக்கள் வாக்குகளை மட்டும் வாங்கிக் கொண்டு மேலவையிலே வந்து உட்கார வேண்டிய அவசியம் இல்லை. அங்கே நின்றிருக்கலாம் என்ற கருத்தின் அடிப்படையிலேதான் சொன்னேனே தவிர, அவையைக் கேவலப்படுத்த வேண்டுமென்றோ அல்லது அவைக்கு இருக்கின்ற உரிமைகளை குறைக்க வேண்டும் என்றோ சால்லவில்லை. இந்த அவையிலே இருக்கின்ற உறுப்பினர்கள் அத்தனை பேர்களும் அதை அறிவோம். மேலவையிலே உள்ள அத்தனை உறுப்பினர்களும் நாங்களும் அறிவோம். இதே அவைக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்கள் என்பதையும் நாம் அறிவோம். அவரை நீங்களும் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நாங்களும் அ அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அந்தக் கருத்திலேதான் நான் சொன்னேன். இந்த அவையின் மதிப்பைக் குறைக்கவில்லை. அவர்கள் பொதுமக்களிடையே நின்று வாக்குகள் பெற்று அந்த அவைக்கு வந்திருக்கலாம். இங்கே வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதற்காகத்தான் சொன்னேன்.

மாண்புமிகு மேலவைத் தலைவர் : மாண்புமிகு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அவர்களுக்கும் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களுக்கும் என்னுடைய வேண்டுகோள். இங்கு பத்திரிகைகளைக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு பேசினாலும், வெளியிலே பேசியதை வைத்துப் பேசினாலும் யாரும் எந்த முடிவுக்கும் வர