86
நிதிநிலை அறிக்கை மீது
கூறியிருக்கிறார். இவைகளையெல்லாம் மத்திய அரசிடம் வாதாடி போராடிப் பெற்ற தமிழக அரசை நோக்கி எதிர்க்கட்சிகள் சார்பிலே சாட்டக்கூடிய குற்றச்சாட்டுகள் என்றாலும், அந்தக் குற்றச்சாட்டுக்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு நாவலர் அவர்களே "மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது, நிதிக்கமிஷன் வாயிலாக வஞ்சிக்கிறது' என்ற பேருண்மையை ஒத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளோடு சேர்ந்து அவரும் சோக கீதம் பாடி இருக்கிறார் என்றாலும்கூட அந்த அளவிற்கு அவர் நிலைமைகளை விளக்கியிருப்பதற்காக நான் அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
ல
ய
அதே நேரத்தில் மத்திய அரசினுடைய உதவிகளை மாநில அரசு பெறுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே எந்த அளவுக்கு இந்த அரசுக்கு ஒத்துழைப்புத்தர முடியுமோ அந்த அளவுக்கு வழங்கப்படும். கடந்த காலத்தில், திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் அப்படிப்பட்ட ஒத்துழைப்பை அங்கே தந்திருக்கிறார்கள். சட்டமன்றத்திலேயும் தந்திருக் கிறார்கள். அதேபோல் ஒத்துழைப்புத்தந்து, மத்திய அரசிட மிருந்து மாநில அரசுக்கு நம் தமிழக அரசுக்கு உதவிகள் கிடைப்பதற்கு கழகம் ஒத்துழைக்கும் என்ற உறுதியை நான் நிதி அமைச்சர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்னொன்று நான் குறிப்பிட்டுச் சொல்கிறேன். நாவலர் அவர்கள், அவர்களுடைய பதில் உரையிலே ஒன்றைக் குறிப்பிட்டார்கள். "மாநிலங்களுக்கு மைய நிதி ஒதுக்கீட்டைப் பொறுத்தவரையிலே, 1951ஆம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து நிதி ஒதுக்கம் செய்ய தொடர்ந்து வற்புறுத்துவோம். இப்போது 1971ஆம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து நிதி ஒதுக்க மத்திய அரசு முன்வந்துள்ளதன் காரணமாக நல்ல திட்டங்களை வைத்து வளமான சமுதாயத்தை உருவாக்கும் பணியிலும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல் போன்ற திட்டங்களைச் செம்மையாக நிறைவேற்றியும்கூட, தமிழகத்திற்கு ஊக்குவிக்கும் வகையில் பரிசு கிடைப்பதற்கு பதிலாக தண்டனை வழங்கப் பட்டுள்ளது” என்று நிதி அமைச்சர் நாவலர் அவர்கள் மத்திய அரசைக் குறை கூறியிருக்கின்றார்கள்.