உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

(

87

இவ்வாறு தன்னுடைய பதில் உரையிலே விளக்கி யிருக்கும் நாவலர் அவர்கள் இந்த அவையிலே வைத்திருக்கிற பட்ஜெட்டைப் பார்த்தால், பக்கம் 5960 அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். “மக்கள் தொகை அடிப்படையில் நிதி உதவியின் அளவை நிர்ணயிக்கும் போது 1971ஆம் ஆண்டு மாநிலங்களில் இருந்த மக்கள் தொகையை அடிப்படையாகக் கொள்ள வேண்டுமென மத்திய அரசு சரியான முடிவை எடுத்திருந்த போதிலும்” என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள்

1951தான் சரியான முடிவு என்பதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. 1971 என்று எடுத்துக்கொண்டு தண்டனை வழங்குகின்றது என்று பதில் உரையிலே குறிப்பிட்டிருக்கின்றார்கள் நாவலர் அவர்கள். வரவு-செலவுத் திட்டத்திலே, எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற புத்தகங் களிலே பார்க்கிறோம். ஆங்கிலத்திலேகூட அப்படித்தான் இருக்கின்றது.

"The Government of India have taken the right decision of freezing the population of State at the 1971 level."

என்று சொல்லியிருக்கின்றார்கள். ஒருவேளை தமிழிலே தவறுதலாக வந்துவிட்டதோ 'சரிவு' என்பது, சரி என்று வந்து விட்டதோ என்பதைப் பற்றிப் பார்க்க ஆங்கிலத்திலே படித்துப் பார்த்தேன். 'ரைட் டெசிஷன்' என்றுதான் குறிப்பிட்டிருக் கின்றார்கள்

பட்ஜெட் உரையிலே 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கை அடிப்படையாக வைத்திருப்பது "ரைட் டெசிஷன் என்று பட்ஜெட் உரையிலே குறிப்பிட்டுவிட்டு பதில் உரையிலே,“அது ஒரு தண்டனை, 1951தான் சரியான அடிப் படை" என்று குறிப்பிட்டிருப்பது விநோதமாக இருக்கிறது. இந்த வேறுபாட்டிற்கு என்ன காரணம் என்று எனக்குப் புரியவில்லை.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : மாண்புமிகு மேலவைத் தலைவர் அவர்களே, அவ்வப்போது குடும்பநலத் திட்டத்தின் மூலம் ஏற்படுகின்ற விளைவுகளைக்