88
நிதிநிலை அறிக்கை மீது
கருத்தில் கொள்ளாமல், 1951ஆம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து அந்தந்த மாநிலங் களுக்குப் பங்கீடு செய்தால், குடும்பநலத் திட்டத்தைச் சிறப்பாகவும், செம்மையாகவும் நிறைவேற்றுவதால் மாநிலங்கள் பாதிக்கப்படமாட்டா என்ற கருத்தைத்தான் தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறோம். நாம் பல முறைகள், பல இடங்களில் வற்புறுத்திவந்தும் கூட, கடைசியிலே இந்த அளவிற்காவது வந்திருக்கின்றார்களே என்று சொல்கின்றேனே தவிர வேறல்ல. இப்போது 1971ஆம் ஆண்டுக் கணக்கு என்று ஏற்றுக் கொள்கின்ற அளவிற்குத்தான் வந்திருக்கின்றார்கள். அது நாம் ஏற்றுகொள்கின்ற முழுமுடிவு என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. சரியான முடிவு என்றால் இந்த அளவிற்காவது வந்திருக்கின்றார்களே என்றுதான் சொல்கிறேன். அந்த அளவிற்கு ஒரு ஐட்டத்திற்கு வந்திருக்கின்றார்களே தவிர, மற்றொரு ஐட்டத்திற்கு 1981ஆம் ஆண்டு என்று சால்லியிருக்கின்றார்கள். அதில் அதில் 1971ஆம் ஆண்டு அளவிலே கூட ஏற்றுக் கொள்ளாமல் இருக்கின்றார்கள். அவர்கள் இப்போதும் அப்படித்தான் சொல்கின்றார்கள். நாங்கள் 1951ஆம் ஆண்டு என்று இருந்தால்தான் நமக்கு முழுமையான நியாயம் கிடைக்கும் என்று சொல்கிறோம்.
கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு மேலவைத் தலைவர் அவர்களே, அந்த விளக்கத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். வரவு செலவுத் திட்டத்தில் தவறாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது 1971ஆம் ஆண்டு நிலங்களில் இருந்த மக்கள் தொகையை அடிப்படையாகக் கொள்ள வேண்டுமென மத்திய அரசு சரியான முடிவை எடுத்திருந்தபோதிலும் - ஒரு வேளை நாவலர் அவர்கள் அதிகாரிகள் கொடுத்த குறிப்பைப் படிக்கும்போது அதைப் படிக்கத் தவறி இருக்கலாம். அதனால் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம் - 'சரியான முடிவு' என்று நாம் சொல்லக்கூடாது. “ஒரு முடிவு எடுத்திருந்தபோதிலும்' என்றுதான் நாம் சொல்லியிருக்க வேண்டும். அது சரியான முடிவு என்று நாமே ஒத்துக் கொண்டால், அது தீமையாக முடியும் என்பதற்காகச் சொல்கிறேன். மாநில அரசின் மீதும், மாநிலத்தின் மீதும்,