உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

89

மாநில அரசு பெற வேண்டிய நிதியின் அளவின் மீதும் நாம் அக்கறை கொண்டிருப்பதன் காரணமாகத்தான் இப்படி யெல்லாம் சொல்கின்றேனே அல்லாமல் குற்றம் சாட்ட வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை.

ஆக நாமே ‘சரியான முடிவு' என்று சொல்லிவிட்டால், பிறகு “நீங்களே சரியான முடிவு', 'ரைட் டெசிஷன்' என்று சொல்லிவிட்டீர்கள், ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்" என்று அவர்கள் கேட்கக்கூடும். இது நாவலர் அவர்கள் கவனத்திற்கு வராமல், அதிகாரிகள் எழுதிக் கொடுக்கும்போது அப்படி ஆகியிருக்கும் என்றுதான் நான் கருதுகிறேன்.

மத்திய அரசு,எந்த வகையில் மாநில அரசைப் புறக்கணிக்கிறது என்று மேலும் உதாரணங்கள் பார்க்கும்போது, முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் மத்திய மாநில அரசுகளின் பங்கு 50:50 என்ற அளவில் இருந்தது. நான்காம் ஐந்தாண்டுத் திட்டத்திற்கு 25.8 சதவிகிதம் மத்திய அரசின் உதவி என்ற அளவுக்குக் குறைந்தது. ஐந்தாம் திட்டத்தில் மத்திய அரசின் பங்கு 26.5 சதவிகிதம் என்ற அளவுக்குக் குறைந்தது. 6ஆம் திட்டத்தில் 21 சதவிகிதம் என்ற அளவுக்குக் குறைந்தது. மத்திய அரசின் பங்கு குறைந்து தற்போது மாநில அரசின் பங்கு 79 சதவிகிதம் என்ற அளவுக்கு ஆகியிருக்கிறது. இது மத்திய அரசு தொடர்ந்து மாநிலங்களுக்கு இழைத்து வருகின்ற தீமைகளில் ஒரு கூறு என்று நானும் இந்த அரசோடு சேர்ந்து, எடுத்துக்காட்ட வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை.

மத்திய அரசு எழுப்பிய மொத்தக் கடன் தொகையில் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் 76 சதவிகிதம் மாநிலங்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட நிலை மாறி கடன் தொகையில் மாநிலங்கள் பங்கு இப்போது 25 சதவிகிதம்தான் என்று குறைந்து, மீதியுள்ள 77 சதவிகிதம் மத்திய அரசுக்கு என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இவைகளெல்லாம் நாவலர் அவர்கள் பதிலுரையில் குறிப்பிட்டதுபோல, நம்முடைய தமிழ் மாநிலம் நிதிக் கமிஷனால், மத்திய அரசால் வஞ்சிக்கப்படுகிறது என்பதற்கு மேலும் உள்ள ஆதாரங்களாகும். எனவேதான் மத்திய அரசோடு