பக்கம்:நித்தியமல்லி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103


ஆறது!.. அப்படியென்ருல், நான் ஆனந்தரங்கத்தின் பரிசைத் திருப்பிக் கொடுத்து வந்ததை அறியும் என் மகள் அவரது கடிதத்தில் தன் மைந்தனுக்கு சுடரை மணம் முடித்து வைக்கும்மாறு கோரிக்கை விடுத்திருந்த தற்கும். பரிசுக்கும் சேர்த்து, கடிதத்தின் அடியில் "என்னே மன்னித்துவிடுங்கள்!' என்று பொதுப்படையாக பதில் கொடுத்திருத்த நிலவரத்தையும் என் அன்புப் :புதல்வி அறிய நேர்ந்தால், அவள் மனம் வருந்தாதா? . ஆனந்தரங்கத்தின் இரு கோரிக்கைகளுக்குமே நான் மறுப்புச் செய்த விவரம் அறிந்தால் அவள் கன்னி உள்" ளம் கானல் நீர்தான் காதல் என்று என்மாதிரி நோகாதா?... நான் செய்த காரியத்தைப்பற்றியும் மக ளிடம் தெரிவிக்காமல் இருந்தது தவறு இல்லையா? என்னையே பெரிதாக நினைத்து என் செல்வத்தை இரண் டாம் பட்சமாக மதிப்பிட்டு விட்டது எவ்வளவு பெருந் துரோகம்1. துரோசுமா?. ஐயையோ, தெய்வமே!...” அலைபாய்ந்து கொதித்துக் குமுறிக் கொந்தளித்த மரகதத்தம்மையை அவள் மனச்சாட்சி குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வேடிக்கை பார்த்தது. அப்போது புதிய கவலையொன்றும் அவளைப் பீடித் தது. ஆனந்தரங்கம் உறங்கிக் கொண்டிருந்ததாகச் சொன்ன வேளையாள் கிழவனை தனகோடியிடம் கொடுத்துவந்த ஆனந்தரங்கத்தின் பரிசுப்பெட்டியை நல்லபடியாக அவர் வசம் அவன் சேர்ப்பித்திருப்பா :னல்லவா? என்ற தவிப்புடன் அவள் படுக்கையில் சாய்ந் தாள், கண்ணிளின் விம்மலுடன். மணி பன்னிரண்டு அடித்தது மரகதத்தம்மைக்கு. தன்முகக் காதுகளில் விழுந்தது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/104&oldid=1277365" இலிருந்து மீள்விக்கப்பட்டது