பக்கம்:நித்தியமல்லி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꭷ2 மரகதத்தம்மையின் இதயம் இப்போது உத யணனைப்பற்றி நினைத்தது: உதயணன் என்ற இளைஞன் தின் மகளின் கல்லூரித் தோழனக அமைந்து அன்பு பாராட்டித் தன் பங்களாவுக்கு தமிழ்ச்சுடரை அழைத் துச் சென்று ராசோபசாரம் செய்த அருமையை மகள் அகழ்ந்த நடப்பு, பின்னர் ஆஸ்பத்திரிக்குச் சென்ற சமயத்தில் அந்த உதயணன், ஒரு காலத்தில் தன்னை காதலில் தோல்வி அடையச் செய்த தனவந்தர் ஆனந்த ரங்கத்தின் புதல்வன் என்ற ரகசியத்தை உணர்ந்த சம்ப வம்-அப்பால், உதயணனே அவன் பழகிய பான்மையை அனுசரித்து 'உதயணன் ரொம்ப நல்ல பிள்ளையாகத் தோணுது!’ என்று தன் புதல்வியிடம் சிலாகித்துப் பேசிய விதம் போன்ற கதைப்பிசிறுகள் அவளது தளர்ந்த நெஞ் சத்தில் தோன்றின. ஆனந்த சங்கம் பிழைத்துவிடுவா ரென உதயணனிடம் ஆறுதல் மொழிந்தபோது, என் லாம் உங்களைப் போலொத்த நல்ல உள்ளங்களோட அனுக்கிரகம்தானம்மா! உங்க அன்பு பெரிசு!...ரொம்ப நன்றிங்க!' என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறிய நிகழ்ச்சி கோடி காட்டியது. ஒரு தடவை தன்னையும் சுடரையும். தின் வீட்டுக்கு வரும்படி கோரிய பேச்சின் உண்மையும் அவளுள் ஒளி காட்டிற்று. உதயணனைப்பற்றிச் சொல் ஆலும்போது அவன் மிகவும் நேர்மையுடனும் நாணயத்துட னும் பாசத்துடனும் அன்புடனும் பழகும் நெறி முறை களைப்பற்றி தமிழ்ச்சுடர் பெருமைப்பட்டுப் பேசிய திகழ்ச்சிகள் ஒன்றல்ல. இரண்டல்லவே? ஆக: இந்த நடப் டிக்களே வைத்துச் சிந்தித்துப் பார்த்தால், உதயணனின் இன்ப நினைவு தமிழ்ச் சுடரின் கன்னி மனத்தில் ஆழப் வதிந்துதான் விட்டிருக்கவேண்டுமென்று தோன்றுகிறது. அதனுல்தான், ராஜசேகரனேப் பற்றிய பேச்சை ஆரம் வித்தபோது, தன் திருமண விஷயமாகப் பிறகு பார்த்துக் கொள்ளலாமென்று சுடர் கூறிவிட்டாள் போலிருக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/103&oldid=786542" இலிருந்து மீள்விக்கப்பட்டது