பக்கம்:நித்தியமல்லி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101


நெஞ்சையும் தொட்டு உலுக்கி விட்டதையும் அவள் உணர்ந்து கொண்டாள். அவ்வுணர்வின் ஆரம்பப் புள்ளி யிலிருந்து பிரிந்த பலதரப்பட்ட சிந்தனைகள் அவளை வட்டமிடத் தொடங்கின. தன் செல்வத் திருமகளேம் பொறுத்த அளவில் அவள் பிறந்ததிலிருந்து அவள் வளர்த்து ஆளாக்கப்பட்டது வரைக்கும் கண்டிப்பும் கருருமாக நிர்வகித்து வந்த தான், அத்தகைய கொள்கை களே தன் முதல் லட்சியம் என்று கொண்டுவந்திருந்த இலக்குப் பிடிப்பு இப்போது தன்னை விட்டுப்பிரிந்து, தன் மகளின் இன்ப எதிர்காலத்தை ஒட்டிப் பின்னின் பிணைந்து கொள்ள வேளை பார்த்துக்கொண்டிருந்த புதுத் திருப்பமும் அவளுக்குப் புலப்படத் தொடங்கியது. என் தமிழ்ச்சுடரைப் பொறுத்தமட்டில் என் கொள்கைகள் அவள் நல்வாழ்வை எண்ணி இதுவரை ஸ்திரமாக இருந்து தென்னவோ உண்மைதான். அதுதான் நியாயமும் கூட. அதன் காரணமாகவே, நான் என் மகளை ஒரு லட்சியம் புதல்வியாகவும் உருவாக்க முடிந்தது! அதுதான் பெற்ற என் மனத்துக்கு நிறைவையும் பெருமையையும் தருகின் றன! என்றும் அவள் அமைதி அடைந்தாள் - ஆல்ை அந்த அமைதி, தமிழ்ச்சுடரின் திருமண விஷயமாக நான் செய்ய வேண்டிய முடிவு-கடமைபொறுப்பு என்ன? என்ற ஒரு கேள்வியில் தறி கெட்டுச் கற்றத் தொடங்கி விட்டது. சுவர்க் கடிகாரம் பத்தடித்து ஒய்ந்தது! ஆனல் அவளது மனச் சலனம் மட்டும் ஒயளே யில்லையே!...... - - ஒரு குவளை தண்ணிர் எடுத்துக் குடித்துவிட்டு வந்து மீண்டும் கட்டிலில் வந்து குந்தினுள். மீண்டும் எண்ணங் கள் புயலாக வீசலாயின.! - o ‘. . . . . *臺 நி. 7-488

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/102&oldid=1277364" இலிருந்து மீள்விக்கப்பட்டது