பக்கம்:நித்தியமல்லி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100


14. அபலே சொக்க வெள்ளிப் பாற் குடத்தைச் சிறை வைத்த இன்ப வேதனையில் மனம் தவித்துக் கொண்டிருந்த ஜன் னல் கம்பிகளேயே வெறித்துப் பார்த்தவாறு படுத்துக் கிடந்த மரகதத்தம்மைக்கு உறக்கம் பிடிக்கவில்லை. எண்ணுத எண்ணமெல்லாம் எண்ணிப் புழுங்கிள்ை: நினைத்திராத பிரச்னைகளெல்லாம் புதிராக மூட்டம். போட்டு பேயாகத் தலைவிசித்தாடதி தொடங்கி விட். டதைக் கண்ட அவள் தலையினின்றும் தலையைத் தூக்கிக் கொண்டு உட்கார்ந்தாள். பூரீமான் குணசீலனின் மறை: வுக்குப்பின் அமைந்த அவ்வீட்டின் நெறிமிக்க தலைவி. மரகதத்தம்மையாகவும் தம் கடமைகளையும் பொறுப்புக் களையும் கண்டிப்புடன் செயலாற்ற வேண்டிய தன் ஒரே மகள் தமிழ்ச் சுடரின் லட்சியத் தாயாகவும் மாறிமாறித். தோன்றினுள். அவ்விருவகைப் பின்னணிக்கு மத்தியில் ஒரு காலத்தில் காதல் தோல்வி அடைந்த மரகதமாகவும் அவள் புதிராகி விளையாடத் தவறவில்லை. இப்போது அவள் சுயப்பிரக்ஞையுடன் சுயநோக்கு. பூண்டு தன்னைத்தானே எடைபோட்டுப் பார்க்கவேண் டிய தொரு கட்டத்திற்குத் தன்னை உடந்தையாக்கிக் கொண்டாள். அப்படிப்பட்டதொரு இக்கட்டுக்குதான் ஆளாகிவிட்டிருப்பதாகவே அவளது அந்தரங்கமும் மனச்சாட்சியும் அவளிடம் உணர்த்தின. என் லட்சியத்தின் ஜீவன் நீ உன் இஷ்டப்பிரகாரம் உன்னை நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்திட்டேன்ஞ" அப்புறம் எனக்கு:ஏதம்மா கவலை? என்பதாக உள்ளம் நெகிழ்ந்து, மனம் உணர்ந்து பேசிய அப்பேச்சு தன் மகளின் நெஞ்சைத் தொட்டதை தன் மகளின் முகபாவத் திலிருந்து புரிந்துகொண்ட மாதிரி அப்பேச்சு தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/101&oldid=1277363" இலிருந்து மீள்விக்கப்பட்டது