பக்கம்:நித்தியமல்லி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

. "அடுத்தாற்போல, நல்ல ரேடியோவும் வாங்கிட :னும்னு இருக்கேன், முன்பு நம்ம வீட்டிலே இருந்து உடைஞ்சுபோன அந்த ரோடியோ மாதிரியே வாங்கிட லாம்!” என்றும் செய்தி அறிவித்தாள் அன்ன. 'உன் திட்டங்கள் அவ்வளவுதானு ?" ‘'நீ என்னம்மா என்ன தமாஷ் பண்ணுறே? நீ படியம்மா. நான் போய் விரதத்துக்கு ரவா கிளறுற வேலையைப் பார்க்கிறேன் அம்மா !' என்று சிரித்தபடி சொல்லிவிட்டு, காப்பி லோட்டாவை எடுத்துக்கொண்டு கிளம்பினுள் மரகதத்தம்மாள். நெக்லஸையும் கடிகாரத் தையும் எடுத்து உன்காட்ரேஜ் பிரோவில் வச்சுக்கம்மா!" ஓ.கே!' என்று சொல்லி கல்லூரிப் பாடத்தில் கவனம் செலுத்த முனைந்த தமிழரசியின் நெஞ்சரங்கத் திலே, அப்பொழுது உதயணனும் ராஜசேகரனும் உச் சாணிக் கொம்பில் நின்று அழகு காட்டி விதியெனச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அது சமயம், அவளது கன்னி மனம் தன்னுடைய தாழ்ந்த செல்வ நிலையை எண்ணி எண்ணி ஏக்கமடைந்து கொண்டிருந்தது. "வாழ்க்கை என்பது உண்மையிலேயே அம்மா சொல்கிற மாதிரி ஒரு பிரச்னைதான் போலிருக்கிறது!’ என்ற எண்ணம் வலுவடையத் தொடங்கியது மறுமுனையில் கவனிப்பாராற்றுக் கிடந்த அவளது சொந்த டைரியில் அவள் கவனம் விழுந்தது. ஏதோ ஒரு வைராக்கியத் தால் உந்தப்பட்டு, ஏதே ஒரு முடிவுடன் பேளுவும் நாட் குறிப்புமாக மனம் லயித்தாள் குமாரி தமிழ்ச்சுடர் காதல் பிரதிக்ஞை விடுத்த உதயணன் தன் பூங்கரம் பற்றி உணர்வின் சுழிப்புடன் மனம் மயங்கி நின்ற இன்பக் கோபம் உயிர்த் துடிப்பாக இயங்கிக் கொண்டே யிருந்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/100&oldid=1277362" இலிருந்து மீள்விக்கப்பட்டது