பக்கம்:நித்தியமல்லி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117


சரி. அவள். முடிவு?... 'காதலிலே தோற்றதுதான் தோற்ருகிவிட்டது. பின், அந்தப் பெண் தன் காதலனைப் பழிவாங்கத்தான் வேண்டுமா?...' என்று ஆங்கிலத் திரைப்படக் கதா நாயகியின் குரூர முடிவு கேட்டு மனம் கொதித்துச் சாடிய மகளின் வெஞ்சினம் அவளையும் மீறி அப்போதும் இடைமறிக்கத் தவறவில்லை. - என் முடிவு கண்டுதான் என் மகள் இப்படிப் பொரிந்து தள்ளிளுளோ? நெக்லஸை ஆனந்தரங்கம் மீண்டும் எனக்கு தன் இறுதி ஆசையென அன்றைய நிலையில் கொடுத்தார். அதை நான் மீண்டும் மறுதளித்து விட்டேன்...இவ்வுண்மையை என் மகளிடமும் சொல்லி விட்டேன்! ஆல்ை, ஆனந்தரங்கத்தின் இரண்டாவது கோரிக்கையையும் நான் நிராகரித்த விதத்தை அவர் கடி தத்தின் அடிக் குறிப்பாக எழுதிவைத்த நான் என் னுடைய இந்தச் செயலைப்பற்றி சுடரிடம் சொல்ல நேர்த் தால் அவள் பாவம், என்ன நினைப்பாள்? ஏன் அவளிடம் இதைச் சொல்லவில்லை?...எனக்கு நான்தான் முதலாவது நின்ற பாவம் என்னை அப்படிச் செய்தது. இப்போது என்னை மனம் புழுங்கச் செய்கிறதே!...எனக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ருமல் என்னை ஏமாற்றிக் கைவிட்டுவிட்ட ஆனந்தரங்கம் திரும்பவும். எனக்குக் கொடுத்த பரிசை நான் ஏற்க மறுத்தேன். அது சரி. என் அளவில் சரி. என் ஏமாற்றத்துக்கு அவ ரைப் பழிவாங்கி, அவரது மன ஆறுதலைப் பறித்துக் கொண்டவரை எனக்கு அதுவே ஆறுதல் ஆகும். இது என்னுடைய சுயநல அடிப்படையில் ஒரு வெற்றிகூடத் தான்! ஆல்ை, என் மகளைத் தன் மகனுக்குத் திருமணம் நி. 8-488 * - - - - “. . . . . . . . . . ; -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/118&oldid=1277371" இலிருந்து மீள்விக்கப்பட்டது