பக்கம்:நித்தியமல்லி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 : 8 செய்துகொடுக்கும்படி அதே ஆனந்தரங்கம் கோரியிருந் ததையும் அல்லவா. நான் ஏற்கவில்லை இது என்ன நியாயம்?. ஆனந்தரங்கத்தின் மகன் உதயணன்பால் தமிழ்ச்சுடர் அந்தரங்கமான நேசம் பூண்டிருப்பதை அறிந்தும்கூட நான் இப்படிச் செய்துவிட்டேனே? வரிசை நிராகரித்த அளவில் நான் நின்று விட்டிருந்தால் எவ்வளவு உசிதமாக இருந்திருக்கும்?-அவரது இரண் உாவது வரத்தையும் நான் ஏற்காமல் இருந்ததற்கு உட் குறிப்பாக ஏன் நான் அப்படிப்பட்ட அடிக் குறிப்பை எழுதினேன்? இரண்டு கோரிக்கைகளை விடுத்திருந்த ஆனந்தரங்கத்தின் மனத்தைச் சுடவேண்டுமென்று நான் செய்த சாகஸம் இப்போது என்னேயே சுட்டுவிட் டதே?...எந்தக் குறிப்பும் அவசரமாக எழுதாமல் நான் இருந்திருக்கக்கூடாதா? இப்போது என் முடிவை வைத்து ஆனந்தரங்கத்தின் முடிவு எப்படி திசை திரும்பி பதோ? ஈஸ்வரா என் ஆத்திரம் அவருக்கும் வந்து, அதன் காரணமாக உதயணனுக்கு வேறிடத்தில் பெண் பார்க்க முனைந்திருந்தால் என் மகள் நிலை என்னுவது? இப்போது, எப்படிப் பார்த்தாலும், என் மகள் நிலை தானே ஊசலாடுகிறது: ஆனந்தரங்கம் லட்சாதிபதி: அவருக்கென்ன? அன்று அவரைத் தேடி பணம் வந்தது? இன்று அவரிடமே பணம் இருக்கிறது. சீமான் வீட்டுச் சம்மந்தம் கிடைக்கும் ஆல்ை. என் மகளுக்கு அவள் மனத்தில் இடம்பெற்ற மனளன் கிடைக்கவேண்டுமே? -அகிலாண்டேஸ்வரி..இப்போதுதான் புதுப் புதி ரொன்று பளிச்சிடுகிறது!.. தனகோடி அந்தப் பெட் டியை ஆனந்தரங்கத்திடம் நாணயமாகச் சேர்ப்பித்திருக் கத்தான் வேண்டும் அப்படிச் சேர்ப்பித்திருந்து, அதைத் திறந்து பார்த்து என் முடிவையும் அறிந்திருந்து, இந்தச் சில தினங்களாக அவர் மெளனம் சாதிப்பதிலிருந்து அவர் என் கடிதக் குறிப்பைப்பற்றிச் சட்டை செய்ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/119&oldid=786559" இலிருந்து மீள்விக்கப்பட்டது