பக்கம்:நித்தியமல்லி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119


வில்லையென்றுதானே அர்த்தம்? ஐயையோ, இது என்ன புதுக் குழப்பம்!. என்னுடைய அனுவசியமான பழி யுணர்ச்சி கடைசியில் என் அருமை மகளின் காதல் கனவையல்லவா பொய்க் கனவாக்கிவிடும்போலத் தோன்றுகிறது?..." தூண்டில் புழுவாய்த் துடித்தாள். அவளது உள்ளத் தில் ஏற்பட்ட கொதிப்பு அடுப்படியில் உலேகொதித்துக் கொண்டிருந்ததை நினைப்பூட்டியது. தலையைப் பிடித்துக் கொண்டு உள்ளே விரைந்தாள். புழக்கடைப் பக்கம் சென்று திரும்பினள். காடைக் குருவிகள் சில கூவிக் கொண்டிருந்தன. உலையைக் கவனித்துக்கொண்டிருந் தாள் மரகதத்தம்மாள். சவுக்கு விறகை உள்ளே மாட்டி ள்ை. பருப்பு அரைக்கால்படி வேண்டுமென்று நாலாவது வீட்டுச் சிறுமி கேட்டாள். கொடுத்தாள் மரகதத்தம்மாள். அச்சிறுமி போனவுடன், குழம்புக்கு ஏற்பாடு செய்ய முனைந்தபோது, மிளகாய் வற்றல் டப்பா காலி யாக இருந்ததைக் கண்டாள். போன சிறுமியைக் கூப்பிட்டு மிளகாய் கொஞ்சம் கடன் கேட்கலாமே என்று தோன்றியது அவளுக்கு. மறுகணம், அவ்வெண் ணத்தை மாற்றிக்கொண்டாள் அவள். எந்தக் குறை யையும் பிறர் ஏன் அறியவேண்டும்?-வீட்டைப் பூட்டிக்கொண்டு மண்ணடிக் கடைவீதிக்குச் சென்று மிளகாய்வாங்கிக்கொண்டு திரும்பினள். t உலே கொதித்து அடங்கியது. வடிநீரை வடித்தாள். கலவடையில் இறக்கி வைத்தாள் அவள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/120&oldid=1277372" இலிருந்து மீள்விக்கப்பட்டது