பக்கம்:நித்தியமல்லி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 1

  • வாங்க!. ஒரு முக்கியமான சங்கதியாக வந்தேன்!”

பரீட்சை முடிவை அறியத் துடித்த மாணவியாக இருந்த நிலையை இப்போது அடைந்தாள் மரகதத்தம் மாள். 'சொல்லுங்க, தம்பி!” - "என் அப்பா பேரிலே உங்க குடும்பத்துக்கே பொதுவான ஒரு அதிருப்தி இருக்கிறதா அறிகிறேன். அதற்குக் காரணம் என்ன, சொல்ல முடியுமாம்மா?... இப்படிக் கேட்கிறது அவ்வளவு நாசூக்காகத் தோணலை எனக்கு. என்ருலும், அதைத் தெளிவுபடுத்திக்கிட்டால் தான் நல்லதுன்னு தோணுது என் மனசுக்கு!...” - இத்தகைய விைைவ அவள் எதிர்பார்த்திருப்பாள்? மரகதத்தம்மை சொன்னுள் நடந்த கதையை. உதயணன் தலையைத் தொங்கப் போட்டவாறு விடைபெற்றுத் திரும்பி விட்டான். * இது என்ன புதுக்கதையாக ஒன்று உருவாகித் தொலைத்திருக்கிறதே?... - அவளுக்கு தன்னை எண்ணி அழுவதா. சிரிப்பதா -- என்றே புரியவில்லை எந்த ஒரு தகவலையும் வெளிக் காட்டாமல் போயிடுச்சே இந்தப் பிள்ளை?-தவித்தாள். அந்தத் தவிப்புத் தீர ஏதாவது புத்தகம் எடுத்துப் படிக்கவேண்டுமென்று மாடியில் ஏறித் தன் மகளின் படிப்பறையை அடைந்தாள். - - கீழே கடிகாரம் பன்னிரண்டு அடித்ததை அவள் கேட்டாள். . - - படிப்பதற்குக் கதைப் புத்தகம் கிடைத்தது. அத் துடன் தமிழ்ச்சுடரின் டைரிக் குறிப்பும் அந்தத் தாய்க் குக்கிட்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/122&oldid=786563" இலிருந்து மீள்விக்கப்பட்டது