பக்கம்:நித்தியமல்லி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122


தமிழ்ச்சுடர் தன் நாட்குறிப்பில் எழுதியிருத்தாள்: "...நான் அன்பர் உதயணன் பேரில் கொண்டி ருக்கும் தெய்வீகக் காதல், கித்தியமல்லியின் தூய்மையான அற்புத மனத்தை ஒத்தது. ஆனல், இருக்கும் நிலவரத்தைப் பாாத்தால் என் தாய். என் காதலை அங்கீகரிப் பார்கள் என்று தோன்ற வில்லை. ஆனல், என் அன்னைத்தான் என் தெய்வம், அவர்கள் முடிவுதான் எனக்கு விதி, என்னை ஈன்ற தெய்வம், அவர்கள்!...விதி எப்படித். திசை திரும்பினாலும் சரி. என்னைப் பொறுத்தள விலே, என் நெஞ்சில் என் அன்பர் உதயணனின் இன்ப நினைவு என் உயிர் என் உடலில் உறைந்திருக் கும் வரை, கித்தியமல்லியின் அமரத்துவம் பெற்ற சுகந்தமாக என்றென்றும் என் கன்னி நெஞ்சில் ஊடாடி கிலைக்கும் என்பது மட்டும் உறுதி! ..." தாய்மனம் அழுது புலம்பிக்கொண்டிருந்தது! அதோ, குமார் தமிழ்ச்சுடர் படம் பார்த்துவிட்டுத் திரும்பிவிட்டாள்! 17. கொடுத்த வாக்குறுதி! தமிழ்ச்சுடர் வழக்கத்தைவிட அன்றைக்குக் குறைவாகவே உணவு கொண்டாள். பலாச்சுளை வற்றல் குழம்பும் பருப்புத் துவையலும் என்ருல் ஒரு பிடி கூடுத லாகவே சாப்பிடுவாள். உப்புக் கண்ட வாசனை வேறு அவளுக்குப் பிடிக்கும். ஏனே அப்பொழுது அவ்வளவு உண்ணவில்லை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/123&oldid=1277373" இலிருந்து மீள்விக்கப்பட்டது