பக்கம்:நித்தியமல்லி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125


கையெழுத்து என்னதுதான் ஆல்ை அது ஆனந்த ரங்கம் எனக்கு அன்று பரிசுடன் வைத்திருந்த கடிதத் தோட நகல் இது!... பாரேன்! அடிக் குறிப்பையும் படியம்மா!' படித்தாள் தமிழ்ச்சுடர். படித்துவிட்டு சலனம் எதுவுமின்றிச் சிரித்தாள். "ஏனம்மா சிரிக்கிறே?’, என் தெய்வத்தின் தீர்ப்புதான் அம்மா என் விதி. உன்னுடைய முடிவுதானம்மா எனக்கு வேதவாக்கு. என்னை நினைச்சுச் சிரிக்கிறேன்? அவ்வளவுதானம்மா!' என்று நிதானமாகச் சொன்னுள். தமிழ்ச்சுடர். என்னுடைய அடிக் குறிப்புப் பதிலைப் பார்த்திட் ஆடுமா சுடர் இப்படி உன்னலே சிரிக்க முடியுது?. அன்பு பாராட்டாமல், பழி வாங்குறது மனித தருமத்துக்கு ஒவ்வாது என்கிற கொள்கை புடையவள், அதற்கு நேர் மாருக நடந்துகிட்ட என் போக்கைக் கண்டுமா உன் ேைல சிரிக்க முடியுது?" துன்பம் வந்தால் சிரிக்கவேணும்னு சொல்லியிருக் காங்களே அம்மா?" சொன்னதை செயல்வடிவிலே நடந்து காட்ட உன் ேைல முடியுது. அப்படின்ன, உன் மனக என் முடிவைக் கண்டு துன்பம் அடைஞ்சிருக்கு என்கிறதை நீயே ஒப்புக் கிடுறே1-இல்லையாம்மா!' - - அதற்கு தமிழ்ச்சுடர் மெளனம் சாதித்தாள். வேர்க்க விறுவிறுக்க எழுந்தாள் மரகதத்தம்மாள். நெருங்கிச் சென்று, மெளனத்தின் கம்பீரத்துடன் தி தானமாக அமர்ந்திருந்த மகளின் கரங்களைப் பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/126&oldid=1277376" இலிருந்து மீள்விக்கப்பட்டது