பக்கம்:நித்தியமல்லி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

. ஏன் தீரக்கூடாது? ஏன் தீரவேண்டாம்?' என்று அழுத்தமாகக் கேட்டாள். மரகதத்தம்மாள் வறட்சியாகச் சிரித்தாள். எதை யும் அவரவர்கள் அனுபவிச்சாத்தான் தெரியுமம்மா! சரி, அந்தக் கதையைப்பத்தி இப்போதென்ன நமக் குள்ளே வாதப் பிரதிவாதம்?. நான் இப்போது ஒரு புதுக்கதுைச்குத் திருப்பப்போறேன்!' என்று மெள்ள ஆரம்பித்தாள் அவள். "கதையா?" என்று கேட்டு தாயை ஆர்வத்துடன் கார்த்தாள் சொல்லம்மா. கதை என்ருல்தான் எனக் குப் பிடிக்குமே?' என்று துாண்டவும் செய்தாள் தமிழ்ச் கடர். "ஆமம்மா. கதைதான். என் வாழ்க்கைக் கதையின் ஒரு பகுதிக்கதை அது. என்னுடைய முதற் காதலைத் தோல்வியடையச் செஞ்ச பூரீமான் ஆனந்திரங்கம் முன்பு எனக்கு வாக்குக் கொடுத்த அளவில் என் திருமணத் துக்கு வைர நெக்லஸ் பரிசளிச்சாரில்லையா? அதை அப் போது நான் ஏற்கமறுத்தேன். இப்போது சில நாள் முந்தி மரணப் படுக்கையில்ே இருந்தப்பவும் அதே வைர நெக்லஸை அழகான தந்தப் பெட்டியிலே வச்சு எனக்குக் கொடுத்தாரில்லையா?- அதையும் நான் திருப்பிக் கொடுத்திட்டேன். இந்த வரைக்கும்தான் உனக்கு என் கதை தெரியும். அதற்கப்புறம் அக்கதையிலே ஒரு பகுதி வின் தங்கிடுச்சு. இந்தாப்பாரு, இந்தக் கடுதாசியை!...” என்று சொல்லி வெள்ளைத்தாள் ஒன்றை மகளிடம் படப் யுடன் நீட்டினுள் மரகதத்தம்மாள். - . ஆதை உன்னிப்பாகப் பார்த்தாள் தமிழ்ச்சுடர். "உன் கையெழுத்தாட்டம் இருக்குதே அம்மா' -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/125&oldid=1277375" இலிருந்து மீள்விக்கப்பட்டது