பக்கம்:நித்தியமல்லி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 27 கூடிய முடிவையும் நான் உணர்ந்துக்கிட்டேன். அம்மா சுடர்! நீ உதயணனையே கல்யாணம் செஞ்சுக்கலாம். அதற்கு ஏற்பாடு செஞ்சிடவா?...' மரகதத்தம்மை மூச்சு விட்டாள். தொண்டையைக் கனத்துக்கொண்டாள். ※ 笨蛋 兴 தமிழ்ச்சுடர் உணர்ச்சி வசப்பட்டுக் காணப்பட். டாள். இதயத்தின் உணர்வுக் குமிழ்கள் கண்களில் ஈரம் செய்தன. அம்மா!. நீங்க என் டைரிக் குறிப்பைப் பார்ப்பிங்கன்னு நான் நினைக்கலே. அது மாதிரியே, நீங்க இப்படி மனம் திரும்பி என்னிடம் பேச்சுக் கொடுப்பிங் கன்னும் எதிர்பார்க்கலே!... உங்க மனம் என் அந்த ரங்கத்தை எடைபோட்டு, சிந்திச்சு, இப்படிப்பட்ட தீர் மானத்துக்கு வந்திருக்குது. அதுக்குக் குறுக்கே நான் நிற்க முடியுமா?. உங்க இஷ்டப்பிரகாரம் செய்யுங்க. ஆன நான் உங்களுக்குத் தெரியாமல், நீங்க எழுதி முடிச்சு அன்றைக்கே ஆனந்தரங்கத்தின் கடிதத்திலே அடிக்குறிப்பு எழுதியிருந்ததை நான் படிச்சுட்டேன். அந்த ஒரு பயங்கரத் திருப்பம்தான் எனக்கு என் டைரி யில் காணப்பட்ட குறிப்பை எழுதுறதுக்கு மனப்பலத்தை. பும் துன்பத்தைச் சிரிப்பால் போக்கிறதுக்கு உண்டான நெஞ்சுப் பக்குவத்தையும் கொடுத்திச்சு!...உதயணனைப் பொறுத்தமட்டிலே, அவர் அப்பா மாதிரி கொடுத்தி. வாக்குறுதியை நிறைவேற்ருது இருக்கமாட்டாரென்றே. எனக்குத் திடமாய்த் தோணுது அப்படியே அவரும் தன் கடமையை உணர்ந்து செயல்பட்டால் சரி. இல்லை, உனக்கு ஏற்பட்ட அதே முடிவு எனக்கும் ஏற்பட்டால்: அதல்ை ஒன்றும் பாதகமில்லை. என் நெஞ்சுக்கு அன்பர் உதயணனின் அமர நினைவு கிடைச்சிட்டுது. அதுவே:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/128&oldid=786569" இலிருந்து மீள்விக்கப்பட்டது