பக்கம்:நித்தியமல்லி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128


போதும், அந்த ஆறுதலே என்னைக் கடைசிவரை வாழ வைக்கும்!"-தமிழ்ச்சுடரின் நா தழுதழுத்தது. "அம்மா, உதயணன்மீது நீ வச்சிருக்கிற இத்தனை நேசமும் பாசமும் ஈடேறுமென்றுதான் நான் நம்பு கிறேன். நீ சினிமாவுக்குப் போயிருந்தப்ப உதயணன் இங்கு வந்தார். நம் குடும்பத்துக்கு தன் தந்தைபேரிலே ஆத்திரம் மூள என்ன காரணம்னு விசாரிச்சுது. நான் நடந்த கதையைச் சொன்னேன்!. அவர் அப்பா கொடுத்த பரிசைத் திருப்பிக் கொடுத்ததைமட்டும் தான் எனக்கு வெளியிட துணிச்சல் இருந்திச்சு!...” என்று விளக்கம் கொடுத்தாள் மரகதத்தம்மை. தமிழ்ச்சுடர் அதிசயமாகப் பார்த்தாள் தாயை. கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ருதவன் மனித -னல்ல என்று என்கிட்டே பலமுறை அவர் சொல்லி, தான் எனக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றியே தீருவேன் என்றும் அடிக்கடி சொல்வாரம்மா... இந் நேரம் அவர் பங்களாவிலே ஏதானும் புயல் வீச ஆரம் பிச்சிருக்கும்!...' "புயலுக்குப் பின்னே அமைதி நிலவவே செய்யு. மம்மா!... என் பதிலையும் பரிசையும் ஆனந்தரங்கம் பார்த்து பலநாள் ஆகிட்டுது. என் முடிவை ஏற்றுக்கிட்ட தாலேதான், அவர் மேற்கொண்டு ஒரு செயலும் செய் யலே!... இருந்து விட்டுப் போகட்டும். நானே நாளேக்கு வலுவிலேபோய் அவர்கிட்டே ஆனந்தரங்கத்துக்கிட்டே நெஞ்சுருகும்படி என் வேண்டுகோளை வைக்கிறேன்!... கட்டாயம் அவர் சமமதிக்கவே செய்வார்!... எல்லாம் சுலபமாகவே முடியும்மா!...” தமிழ்சுடர் மனம்விட்டு அழகுகூட்டிப் புன்புறுவல் அசெய்தாள். . . . . . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/129&oldid=1277377" இலிருந்து மீள்விக்கப்பட்டது