பக்கம்:நித்தியமல்லி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 29 சூரியன் இறங்கு முகத்தில் இருந்தான். அருகில் கிடந்த பத்திரிகையைப் புரட்டினுள் தாய். குடந்தை அரசினர் பெண்கள் கல்லூரியின் ஆண்டு. விழாவின்போது, படித்த பெண்கள் திருமணத்தைத் தள்ளிப்போடக் கூடாது என்று தமிழரசின் முதல்வர் உணர்ந்து கூறியிருந்ததைப் படித்துவிட்டு, அப்பகுதியை: மகளிடமும் காண்பித்தாள் மரகதத்தம்மாள். வெட்கத்துடன் சிரித்தாள் குமாரி தமிழ்ச்சுடர்! 18. 'அம்மா!...” திரு அண்துைரை அவர்கள் தீட்டிய பழைய கட்டுரை ஒன்றை தமிழ்ச்சுடர் ஒரு கூட்டில் அடைத்து வைத்திருந்தாள். அது கல்லூரி நூலொன்றில் இருந்தது. இரண்டாம் தவணையாகவும் அவள் அக்கட்டுரையின் சிந்: தனைகளைப் பார்வையிட விரும்பினுள். "...கலை என்ருல் வானவில்லிலே தோன்றி மறைந்து. விடும் அழகை எப்போதும் மக்கள் கண் எதிரே கொண்டு. வந்து நிறுத்தும் ஒரு மாயாஜாலத் திந்திரம் என்றும், ஊனக்கண்ணுக்குப் புலப்படாத உருவ அழகுகளைக் கலைக் கண்கொண்டு கண்டறிந்து, மற்றவரின் பார்வைக்குக் கொண்டுவரும் மந்திரவாதியின் வேலை என்றும் கூறி, கலையை சாதாரண மக்களுக்குச் சம்பந்தமேயற்ற அதி யற்புதப் பொருளாக்கினர் பலர். கலையை ரசிப்பதற்கு. தனியானதோர் பண்புவேண்டும் என்றனர். இவ்வளவு கற்றுச் சுவர் எழுப்பி, இவர்கள் வளர்த்த கலை எதற்கும். பயன்பட்டு வந்தது என்று கவனித்தால், சுகபோகிகளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/130&oldid=786572" இலிருந்து மீள்விக்கப்பட்டது