பக்கம்:நித்தியமல்லி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130


சுந்தரிகளை வருணிக்கவும் சூரர்களைப் பாராட்டவும் மற்றும் இயற்கை எழில், செயற்கை எழில் என்பன போன்றவைகளை விளக்கவும் பயன் கட்டதேயன்றி, வாழ் வுக்கும் பயன்படவில்லை!...” கீழ்த்தளத்தில் மறுபடியும் அம்மா அழைத்த அழைப்பு அவள் காதுகளில் துல்லிதமாக விழுந்தது. விழுத்த மாரகச் சேலையை கொய்து போட்டுக் கொண் டான். நெஞ்சகத்தைத் தீண்டிய கைவிரல் ஸ்பரிசத்தின் இன்பக் கிளுகிளுப்பு அவளுள் ஒரு புதிய-புத்தம் புதிய கலைஉணர்வை-கலே அழகை உண்டுபண்ணிவிட்டிருந் ததை அவள் உணர்த்தாள். படித்த கட்டுரையை மடித் துப்போட்டுவிட்டு, மீண்டும் நிலைக்கண்ணுடிக்கு வந் தாள். நெஞ்சிடைத் தவழ்ந்த உதயணன் அவளது கண் களில் தோன்றி அந்தக் கண்ணுடியை புதுமெருகு பேறச் செய்திருந்தானே? கடந்த சில நாட்களாக அவள் அடைத்து வைத்திருந்த கனவின் வாசல் கதவுகள் திறந்துவிடப்பட்டு நீண்ட பொழுதாகிவிட்டது சதா உதயணனப்பற்றியே அவள் மனம் எண்ணமிட்டது. லீவு நாளே இப்படிப்பட்ட மனலயிப்பில் கழித்துவிட் டால், அப்புறம் நாளேக்காலையிலிருந்து புதுத்தெம்பு டன் கல்லூரிப் பாடங்களைப் படிக்கலாம் என்று அவள் தனக்குள் சமாதானப்படுத்திக் கொண்டாள். தாய் எனும் மகத்தான தெய்வசக்தி எனக்கு எவ்வளவு பெரிய கனவு லோகத்தைக் காட்டிவிட்டது!... அன்பர் உதயணன் கட்டிக் கொடுத்த காதல் மாளிகையிலே நான் காதல் தீபம் ஏற்றிவைக்கப் போகிறேன். என் உதயணன் அவர் அப்பா போலல்ல. என்ன அவர் அங்கீ கரித்து விட்டதுபோலவே என்ன அவர் அடைந்தும் விடுவார் என்னுள் நிலைத்துவிட்ட நித்தியமல்லியின் நிரந்தரமான அற்புத வாசனைக்கு இனிமேல் புதிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/131&oldid=1277378" இலிருந்து மீள்விக்கப்பட்டது