பக்கம்:நித்தியமல்லி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"3" பொலிவும் புதிய மணமும் கிட்டும்!...” நினைவுப் பூக்கள் எண்ணச் சரம் தொடுத்தன. அவள் மனம் உதயணனைச் சந்தித்த முதற்சந்திப்பை நினைத்தது. அவனுடன் பேசி மகிழ்ந்த மகிழ்ச்சிகளே நினைத்தது. அவன் தன் வீட்டில் தனக்கு ராஜோபசாரம் செய்த காட்சியை நினைத்தது. பூங்கரம் தொட்டு ஜெனரல் ஆஸ்பத்திரி மாடியில் வாக் குக் கொடுத்தி ஆனந்தச் சம்பவத்தை நினைத்தது, மணந்தால் தன்னையே மணம்பது என்று கொண்டிருந்த வைராக்கிய சங்கல்பத்தை நினைத்தது. கடைசியில் அவளுடைய அன்ருெரு நாள் தான் டைரியில் எழுதிவைத்த குறிப்பு தென்பட்டது. மீண்டும் படித்தாள் குமாரி தமிழ்ச்சுடர். தன் எண்ணத்தின் முடிவை தானே ஆராய்ந்தாள் அவள். குறிப்பு ஒடியது. "...நான் அன்பர் உதயணன் பேரில் கொண்டி ருக்கும் தெய்விகக் காதல், கித்தியமல்லிலன் தூய்மையான அற்புத மணத்தை ஒத்தது. ஆனல், இருக்கும் கிலவரத்தைப் பாாத்தால், என் தாய் என் காதலை அங்கீகரிப்பார்கள் என்று தோன்றவில்லை. ஆனல் என் அன்னைதான் என் தெயவம் அவர்கள் முடிவுதான் எனக்கு விதி. என்னை ஈன்ற தெய்வம் அவர்கள்! விதி எப்படித் திசை திரும்பினலும் சரி. என்னை பொறுத்தளவிலே என் நெஞ்சிலே என் அன்பர் உதயணனின் இன்பநினைவு. என் உயிர் என் உடலில் உறைந்திருக்கும்வரை, கித்தியமல்லியின் அமரத்வம் பெற்ற சுகந்தமாக என்றென்றும் என் கன்னி நெஞ்சிலே ஊடாகு கிலைக்கும் என்பதுமட் இம் உறுதி!...' -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/132&oldid=786574" இலிருந்து மீள்விக்கப்பட்டது