பக்கம்:நித்தியமல்லி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 38 'அப்பா!. அப்பா!' என்று கதறியவாறு ஓடினன் உதயணன். மரகதத் தம்மாளும் தமிழ்ச்சுடரும் தேம்பிக்கொண் டிருந்தார்கள்! ஆனந்தரங்கத்திற்கு மட்டுந்தான அழத் தெரிய வில்லே?- அவர் மனையாட்டி செங்கமலவல்லிக்கும்தான் நாட்கள் நழுவின! ஆனந்தரங்கத்தின் மகன் உதயணனுக்கு அடுத்த: தடவையாகவும் குமாரி தமிழ்க்சுடர் தன் கையாலேயே டிக்கிரி காப்பி போட்டு நீட்டினுள். உதயணன் மெளனமாக அதை வாங்கிப் பருகினன். வைர நெக்லஸ் தித்த பெட்டியில் அழகு காட்டியது: 'அப்புறம் என்னம்மா உங்க முடிவு?' என்று ஆதங்கத்துடன் வினவினன் உதயணன். முகத்தில் செழித்திருந்த உரோமங்களை வருடியவாறு கேட்டான் அவன், மோதிரங்கள் மின்னின. மரகதத்தம்மை வாய் திறந்திாள்: . 'தம்பி! இந்த நெக்லஸ் உங்ககிட்டேயே இருக் கட்டும் நான் என் தெய்வம் குணசீலனின் சொத்து. அவரோட நினைவு ஒண்ணுதான் எனக்கு. என் கல்யாணத்துக்கப்புறம் விலை மதிக்க முடியாத சொத்தாக இருந்திச்சு: இப்பவும் அவர் இன்ப கினைவுதான் எனக்கு மாபெரும் ஆறுதலாக இருந்: திட்டு வருது இந்த நிலையிலே எனக்கு அந் நிலை யான உங்க அப்பாவோட பரிசான இந்த வைர நெக்லஸை நான் வாங்கிக்கிடுறதை என் மனச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/139&oldid=786581" இலிருந்து மீள்விக்கப்பட்டது