பக்கம்:நித்தியமல்லி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 இப்போது நடந்திருக்திறது என்ன?. தவித்தது அவள் பெண் மனம், - உள்ளே வாங்கம்மா!' என்று வரவேற்ருன் .உதயணன், அங்கே மயான அமைதி சூழ்ந்திருந்தது. எவ்விதச் சலனமுமின்றி வந்த செங்கமல வல்லி , :தம்பி! உங்கப்பா கதை முடிஞ்சிடுச்சு' என்று சொல்லித் தும்மினுள். கையில் பொமரேனியின்’ தாய் தவழ்ந்தது நீர்த்துளி ஒன்று இடது கண் முனையில் ஊசலாடியது. மரகதத்தம்மை பதட்டத்துடன் ஏறிட்டுப் பார்த் தாள். 'ஆ' என்று உதயணன் அலறிக்கொண்டே உள்ளே ஹாலேக் கடந்தபோது, அங்கு தேம்பிய வண்ணம் வேலேக்காரக் கிழவன் தனகோடி வந்தான். 'தம்பி! உங்கப்பா மூச்சு திடுதிப்பென்று நின்னு அடுச்சு தம்பி!. அம்மா! நீங்க கொடுத்திட்டுப்போன பெட்டியை என்னமோ தோணி திறந்து பார்த்தேன். அதிலிருந்த உங்க பதிலேக் கண்டதும் எனக்கு பயமாப் போச்சு. இந்த உங்க முடிவை பெரிய எஜமானர் அறிஞ்சா, மனசொடிஞ்சு போயிடுவாரேன்னு இது நாள் பரியர்தம் அதைப்பத்தி அவர்கிட்.ே யாதொண் ஆணுமே சொல்லாமல் இருந்தேன். இப்போ கொஞ்சம் நல்லபடியா இருந்தமாதிரி காணப்பட்டார். நெஞ்சு வலியும் கொஞ்சம் குறைஞ்சிருந்திச்சு. நீங்க தந்திட்டுப் போன பெட்டியைக் கொடுத்தேன். அந்தக் கடுதாசி யைப் படிச்சார். ஐயோ!'ன்னு ஒரு அலறு அலறிஞரு. அப்பவே பொசுக்கினு உயிரும் பிறிஞ்சிடுச்சு, தம்பி!" அழுதான் தனகோடி. w . . . . . ... - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/138&oldid=786580" இலிருந்து மீள்விக்கப்பட்டது