பக்கம்:நித்தியமல்லி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#36 கல்லாய்ச் சமைந்து விட்டாள் மரகதத்தம்மாள். *ஆனந்தரங்கத்தின் பரிசை நான் ஏற்றுக்கிட்டேன:அட தெய்வமே'... அப்படியென்ருல், அந்த வேலைக் காரன் தனக்கோடி என்னையும் ஆனந்தரங்கத்தையும் ஏமாற்றி விட்டாளு?’ அவள் என்னவோ சொல்ல நினைத்தாள், உதயண னிடம் பிறகு, அங்கு பங்களாவுக்குப் போவதற்குத் தயா ராகிவிட்டாள். தமிழ்ச்சுடரும் உடன் தொடர்ந்தாள். தமிழ்ச்சுடரின் கையால் கொடுக்கப்பட்ட டிக்கிரி காப்பி உதயணனுக்குப் புதிய மனத்தெம்பை அளித்த தில் வியப்பு ஏது? இல்லை விந்தைதான் ஏது? ,毅 爱 聚 ஆனந்தரங்கத்தின் பங்களா வந்து விட்டது. உதயணன் இறங்கியவுடன், முதலில் பத்ட்டத் துடன் காரிலிருந்து இறங்கியவள் மரகதத்தம்மாள் தான். அடுத்ததாக, தமிழ்ச்சுடர் இறங்கிளுள். மரகதத்தம்மாள் கூர்ந்து சுற்று முற்றும் நோக்கி ஒள். - காவல்காரக் கிழவன் தனகோடியைக் காளுேம்! மரகதத்தம்மைக்கு உள்ளம் குலுங்கிச் சரிந்தது: உடல் குலுங்கிச் சரியாமல் இருந்தது. அப்படி யென்ருல், ஆனந்தரங்கத்தின் பரிசான வைர நெக்லஸ்ை நான் வேலைக்காரன் தனகோடியிடம் திருப்பிக் கொடுத்து, அதை ஆனந்தரங்கம் அவர்களிடம் சேர்ப் வித்து விடும்படி சொல்லி வந்தபடி அவன் செய்யவில்லை என்றுதான் பொருள் அந்தப் பொருளை கிழவன் அபேஸ் செய்துதான் விட்டிருப்பான்!. கடவுளே! - அவள் மனம் கொதித்தது. நான் நினைச்சிருந்தது என்ன!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/137&oldid=786579" இலிருந்து மீள்விக்கப்பட்டது