பக்கம்:நித்தியமல்லி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4. ஒருநாள் தமிழ்ச்சுடர் தன் அன்னையுடன் கடைத்தெருவுக்குப் போயிருந்தாள். சைன பஜாரின் முரண்டுபிடித்த பான்மைக்கும் பாவனைக்கும் ஈடு: கொடுத்து அவர்கள் இரண்டுபேரும்-தாயும் மகளும்ஜவுளிக் கடை ஒன்றுக்குள் நுழைந்தார்கள். தமிழ்ச்சுடருக்கு அப்போது பரீட்சைச் சமயம். பி. ஏ. இறுதி ஆண்டு, டிசம்பர் பரீட்சை. மகள் புதுப் புடவை கட்டிக்கொண்டு பரீட்சை எழுதவேண்டுமென்று: தாய் விரும்பினுள். மகளுக்கு அக் கொள்கை சிரிப்பை உண்டுபண்ணியது. ஆலுைம், அன்னேயின் அன்புப் பாசம் அவளுள் சிலிர்ப்பை உண்டாக்கிவிட்டது. அதற்கு மேல் அவள் வாய் திறக்கவில்லை; ம் கொட்டினுள். அதுவும் போதாதென்று, ! உன் இஷ்டம்போலச் செய் யம்மா!' என்று உரிமை வேறு கொடுத்துவிட்டாள். இவ்வளவு போதாதா? மரகதம்மைக்கு வாயெல்லாம் பல்லானது. வெண் ணிைறம் ஒளிர்ந்தது. இடுப்புச் சேலைமாதிரி. காலி' கிளாத் வகையில் அழகிய-கவர்ச்சி கலந்த வாயில் புடவை ஒன்றையும் அதேகலரில் சோளித்துண்டு ஒன்றை யும் எடுத்துக் காட்டினுள். மகள் ஓகே சொன்னுள். தமிழ்ச்சுடர் உள்ளங்கையில் மூடி வைத்திருந்தி நூறு ரூபாய்த் திாள் அம்பலத் அக்கு வந்துவிட்டது. ஆல்ை, அம்பலத்துக்கு வந்த அந்த நூறு ரூபாய்த் தாள் சில்லறை கிடைக்கவேண்டி கல்லாவுக்குச் சென்றது. சென்றவிடத்தில், எக்காளச் சிரிப்பு எள்ளி நகையாடி, யது. 'அம்மா வேறே அம்மாளாக இருந்தால் நல்லாக் கேட்டிருப்பேன். என்ன்ைனு கேட்டிருப்பேன்னு ஒங்க ளுக்குப் புரியவேணுமா?' எம்மாம் நாளாகம்மா ஒங்க. ளுக்கு இந்தப் பிஸினஸ் அப்படின்னு ஒரு மொத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/15&oldid=786585" இலிருந்து மீள்விக்கப்பட்டது