பக்கம்:நித்தியமல்லி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. திருவாளர் ஆனந்தரங்கம் குமாரி தமிழ்ச்சுடர் ஒர் அரைக்கணம், செய்வகை விளங்காமல் தவித்தாள். இ ை விளங்காத பதட்டமும் :பதைப்பும் அவளுள் உள் வட்டமாக லயித்துச் சுழித்து அலைமோதின. நெஞ்சக்கடலில் ஏதேதோ நினைவலைகள் எப்படி எப்படியெல்லாமோ ஆர்ப்பளித்தன. அவளது மார்பகம் எம்பித் தணிந்தது! . அவள் தன்னுடைய குளிர்ந்த பார்வையை ஒழுங்கு படுத்திக்கொண்டு மேலாடையைப் பார்த்தாள். மலுகித் திரும்பியவிழி வட்டங்களிலே மஹாத்மா, நேருஜி, காமராஜ், சாஸ்திரி போன்ற பெருந்தலைவர்கள சுழன்ருர்கள், ஆளுல் அவளது உள்மனத்தின் வட்டச் சுழிப்பில், சற்று முன்னம் அவள் கண்ட அந்தக் காட்சி தான் அவளுக்கு இன்னமும் தவிப்பையும் தளர்ச்சி யையும் மூட்டம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தன. * மிஸ்டர் உதயணனின் முகம் ஏன் அப்படி கலவரம் காட்டியது? என்ற இந்த ஒரு வினதான் அவள் முன்னே விடுபடமுடியாததொரு புதிராக வாேயமிட்டது கேட் கடுக்கொண்ட கேள்விக்கு அவளால் பதில் சொல்லிக் கொள்ள முடியவில்லை. மீண்டும் பழைய பதட்டமும் பரதவிப்பும் அவளே மடக்கிக் கிடத் திக் கொண்டன. சிக்கலின் நிலைப்புடன் அவள் எதிர்ப்புறம் உற்றுப் பார்க் காமல் இருக்க முடியவில்லை. சில்க் ஜிப்பா பளபளக்க வீற்றிருந்த தலைவர் ஆனந்த . ரங்கத்தின் முக விலாசத்தில், சாந்தியும் சமாதானமும் விற்றிருக்கவில்லை என்பதை அவள் அனுமானம் செய்ய அதிக நாழிகை பிடிக்கவில்லை. உடலின் கண்களே மூடிக் கொண்டபோது, ம ன த் தி ன் க ண் க ள் திறந்து கொண்டன. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/14&oldid=786582" இலிருந்து மீள்விக்கப்பட்டது