பக்கம்:நித்தியமல்லி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12


"தமிழ்ப் பூங்கா ஆசிரியர் பூமாலேயும் கையுமாக தின் ருர், தலைவர். ஆனந்தரங்கம் பரிசுத் தொகையுடன் எழுந்தார்: வாசனைத் திரவியத்தின் நெடி பரவியது. அப்போது மேடை மீதேறி வந்தாள் குமாரி தமிழ்ச் சுடர், ஆசிரியர் ஏந்திய மா லை ைய ப் பணிவுடன்அன்புடன் கையில் வாங்கிக் கொண்டாள். கையொலி விண்ணப் பிளந்தது. ஆனுல் பரிசுத் தொகையை மட்டும் அவள் வாங்கிக் கொள்ளவில்லை. மன்னியுங்கள் ஐயா! நாணயம், நேர்மை, சத்தியம் முதலிய நற்பண்புகளைக் காப்பாற்றத் தவறிய ஒரு பெரிய மனிதரிடமிருந்து நான் பரிசைப்பெற விரும்பவில்லை! நீங்களே உங்கள் அன்புக் கரங்களாலேயே எனக்குப் பரிசளியுங்கள், மனத் திருப் தியுடன் ஏற்றுக்கொள்கிறேன்!,’ என்று ஆசிரியரை நோக்கிச் சொன்னுள் குமாரி தமிழ்ச்சுடர். அவ்வாறே ஆசிரியர் .ே ம க வ ண் ண ன் பரிசுத் தொகையை அவளிடம் சமர்ப்பித்தார். அவள் கைகூப் பிப் பெற்றுக்கொண்டாள். பரிசுடன் அவள் தன் இருப் விடத்தை அடைந்தபோது, பரவிக் கிடந்தது ஆழிய அமைதி. அவ்வமைதியை சிலிப்பர் சத்தம் துண்டா டியது. அவள் இருப்பிடத்தில் வந்து அமர்ந்து திரும்பிய நேரத்திலே, உதயணனின் முகம் அவள் பார்வைக்கு இலக்கானது அந்த முகம் ஏன் அப்படிக் கலவரத்தை விளைத்துக்காட்டியது ? . . . . . . . . . . . . . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/13&oldid=1277288" இலிருந்து மீள்விக்கப்பட்டது