பக்கம்:நித்தியமல்லி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16


'இதோ என்னுடைய முத்து வளையல் ஒண்ணைக் கழற்றித் தாறேன். வச்சுகிட்டு அதுக்கு ரசீது கொடுங்க! ... -- ஊஹகும், நீங்க உங்க முதலாளியை போன்' செய்து அழையுங்க. அவர்கிட்டேதான் என் வளையலை நம்பிக் கொடுப்பேன். வீட்டுக்குப்போய் பணம் கொண்டுவந்து உங்க கையிலே கொடுத்திட்டு, என் வனே யலே மீட்டு கி றேன். கொடுங்க அந்த நூறு ருபாய் நோட்டை! எங்க தகப்பனர்கிட்டே பட்ட கடனுக்காக சிலபேர் கொஞ்சம் கொஞ்சமாக இப்போ அம்மா கிட்டே பணம் செலுத்திக்கினு வராங்க அந்த இனத்திலே யாரோ ஒரு புண்ணியவான் இப்படி மோசடி செய்திருக்கான். தீப்பு செஞ்சுவன் எப்பவாயினும் அகப்பட்டுத்தான் திருவான். அப்போ நானும் சட்டமும் விழிச் சுக்கிட்டு இருப்போம்! ஊம் . உங்க கையிலே அந்தப் பேச்சேல் லாம் எதுக்கு?.. ' என்று பேசி முடித்தாள் தமிழ்ச்சுடர். காஷியர் வழிந்த அசட்டை துடைத்துக்கொள்ள ஞாபகம் இல்லாதவனுக. நூறு ரூபாய்த்தாளை எடுத்து அவளிடம சமர்ப்பித்தான், ஆசனத்தை விட்டு எழுந்து நின்றபடி, கிராப்புத்தலை முடியின் முனைப்பகுதியில் வேர்வைத் துளிகள் சரம் கோத்திருந்தன. தமிழ்ச்சுடர் அந்த ரூபாய் நோட்டை வெகு ஆனவ மாக வாங்கிக்கொண்டாள், வானைத் தழுவும் முகில் துண்டங்களாகச் சரிகுழற்கற்றைகள் அவளது தோள் பட்டையைத் தழுவிச் சரிந்தன. சரிந்து விழுந்த மேலாக்கைச் சரிசெய்து கொண்டாள். அவள் இப் போது தன் தாயைப் பார்த்தாள், அமைதியின் கம்பீரத் தோடு, மரகதத்தம்மையின் வெளிறிய உதட்டுக் கோடியில் ஒரு சிரிப்பு கோடி காட்டிற்று. அச் சிரிப்பில் "உன் தந்தையின் அருமைச் செல்வி அல்லவா நீ? உன் அப்பா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/17&oldid=1277289" இலிருந்து மீள்விக்கப்பட்டது