பக்கம்:நித்தியமல்லி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22


iாசம் மண்டிய அன்பும் பரிவும் அவன் விழிகளிலே ஈரத்தை உண்டு பண்ணின. . நன்றியுரை முடிந்தது. அவள் எழுந்தாள். எழுந்து நடந்தாள். அவள் ஆவலுடன் கண்டு பேசவிரும்பிய அந்த முகம்-அந்த முகத்துக்கு உடைய உதயணன் அவளைப் பார்த்தும் பாராதது போல் முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டு நழுவி விட்டதை அவள் பூரணமாகக் கண்டாள். 3. கொல்லிக் குடவரைப் பாவை! சென்னை மாநகரத்தில் இந்நாளிலே பஸ்பிடிப்பது என்பது அந்த நாளையிலேயே கோட்டை கொத்தளங் களைப் பிடிப்பதுபோலத்தான்! கூட்டம் கணித்து, தோது பார்த்துப் பஸ் பிடித்து, வஸ் ஏறி வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் குமாரி தமிழ்ச் சுடர் வீட்டை விட்டுப் புறப்பட்ட போதிருந்த மகிழ் வின் பெருக்கம் இப்போது சற்றே அடங்கிவிட்ட மாதிரி இருந்தது. திருநாளைப் பார்க்கத் துடிக்கும் குழந்தை திருவிழாவுக்குப் போய்த் திரும்பினதும் வாயடைத்து விடுமே, அப்படிப்பட்ட நிலைதான்! - . இலக்கியப் பரிசுக்கான தொகை, செக் ரூபத்தில் இருந்தது. அதை உறையுடனேயே தன் தாயிடம் இகாடுத்தாள்: கொடுக்கப்பட்ட மலர் மாலையையும் கொடுத்தாள். ஈன்றவள் பெரிதும் உவந்தாள். மகளுக்கு வாய்த் திட்ட சீரும் சிறப்பும் அவளை அமைதியடையச் செய்தன:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/23&oldid=1277294" இலிருந்து மீள்விக்கப்பட்டது