பக்கம்:நித்தியமல்லி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21


வெளியில் துளிர்த்திருந்த ஈரத்தைத் தரிசித்தாள். எதிர்த்தரப்பில் அன்று அரிதாகி விட்ட அந்த ஈரத் திற்குப் புணையா இந்த ஈரம்?-ஊஹா9ம்! ... ... 粥 藥 影 அருகிருந்த அம்மணியின் கைக் குழந்தை ஒன்று தமிழ்ச்சுடரின் கன்னத்தை வருடியது. தமிழ்ச்சுடர் வாரிச் சுருட்டிக் கொண்டு விழித்தாள். சுப நினைவு பெற்ருள். மேடையில் தலைவர் ஆனந்தரங்கம் எழுந்து நின்று பேசத் தொடங்கியிருந்தார். குமாரி தமிழ்ச்சுடரின் புலன்கள் கூர்மை பெற்றன. " ... குமாரி தமிழ்ச்சுடருக்கு என்பேரில் நிரம்பவும் கோபமாகயிருக்கும். அதற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது. அது எங்கள் குடும்ப வியவகாரம். ஆனாலும், தமிழ்ச்சுடர் மீது எனக்குத் துளியும் கோபமில்லை. என் கையால் அது பரிசை வாங்க மறுத்தால் பரவாயில்லை. என்மனமார நான் வாழ்த்தும் வாழ்த்தை அது நிச்சயம் ஏற்க மறுக்க முடியாதல்லவா? அதை மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். அது சகல செளபாக்கியங்களுடன் சிறப்புற்று விளங்கவேண்டுமென்பதே என் ஆசியாகும்: . இம்மாதிரி இலக்கியப்பரிசுகளை இன்னும் நிறைய 'அது' வாங்க அனுக்கிரகம் செய்யும்படி நான் கும்பிடக்கூடிய அனுமாரை வேண்டுகிறேன்!” ஆனந்தரங்கம் இருக்கையில் உட்கார்ந்தார். தமிழ்ச்சுடரின் மேனி புல்லரித்தது. ஆனந்தரங்கத் தின் வாழ்த்துப் பேச்சு அவள் மனத்தைத் தொட்டது. அப்பேச்சின்லாழத்தில் ஒருவகைப்பட்ட-இனம்புரியாதி நி. 2-488 - . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/22&oldid=1277293" இலிருந்து மீள்விக்கப்பட்டது