பக்கம்:நித்தியமல்லி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24


தமிழ்ச்சுடர் திரும்பினள்.

வாம்மா, சாப்பிடலாம். வெள்ளனவே சமைச் சது!’ என்ருள் தாய்.

மகள் பின்தொடர்ந்தாள். பீரோவில் செக் கைப் பத்திரமாக வைத்துவிட்டுத் திரும்பினுள் மரகதத்தம்மை. மகளுக்கு ஒரு பிடி சோறு" கூடுதலாகவே போட்டாள். அவளும் அட்டி சொல்லா மல் சாப்பிட்டாள் - 'சூரிய காந்தி நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது . ரேடியோவில். அண்டிக் கொண்டிருந்த பட்டப் பரீட்சைகளின் நினைவை நெஞ்சில் சுமந்தவளாக, தன் படிப்பறையில் வந்து அமர்ந்தாள் தமிழ்க்சுடர். படிப்பு ஒன்றில் மட்டிலுமே மனம் ஒன்றிய மனத்துடன் அவள் மேஜை மீதிருந்த புத்தகங்களைப் புரட்டியெடுத்தாள். வரலாற். றுடன் இரண்டறக் கலந்துவிட்ட தாஷ்காண்ட் சமாதா னத் தலைவரின் படங்கள் பல வெளியாகியிருந்த அவ். விதழை மறுபடியும் புரட்டினுள். விழிவரம்புகளைத் துடைத்துக்கொண்டாள். அவளது நளினமான விரல் கள் கல்லூரிப் பாடப் புத்தகங்களைப் புரட்டின. தமிழ்ப் பாடப் புத்தகம் முன்னே வந்தது. . . . . . கபிலரின் குறுந்தொகைப் பாடல் ஒன்று முன்தினம் பேராசிரியை விளக்கம் சொல்லிக் கொடுத்திருந்த சிந்: தனைகள் அவள் நினைவினை வருடி நின்றன. காரிக் கோமான் கொல்வி மலையை ஆண்டுவந்தான். அங்கே குறமகள் ஒருத்தி. அவளே ஒர் இளைஞன் காதல் செய்கிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/25&oldid=1277296" இலிருந்து மீள்விக்கப்பட்டது