பக்கம்:நித்தியமல்லி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

る5 அவளும் அவனை விரும்புகிருள், ஆகவே அவள் மனத்தால் விரும்பிய அதே இளைஞனுக்கே அவளை மனம் முடித்துவைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இந் நிலையிலே, தலைவனைக் கண்டு பேசி உறவாட அவனது அன்புத் தோழன் வருகிருன். அவனுக்கு அந்திக் கொல்லிமலைப் பூவையைப் பற்றி விளக்கம் செய்கிருன் நண்பன். திங்களுடைய இல்லங்களை நாடி வருபவர்களுக்கும் யானைத் தந்தங்களை விற்று உணவளிக்கும் இனிய குண் நலம் பூண்டவர்கள் கொல்லிமலை மக்கள். அவர்களின் குடியில் பிறந்த நற்குலப் பாவை அவள். நீ காதலிக் கும்-உன்னைக் காதலிக்கும் அப்பெண், வல்வில்லோரி கொல்லிக் குடவரைப் பாவை யாவாள்!" இக்கட்டத்தை அம்மையார் நயம்பட உரைத்த பான்மையை அவள் திரும்பவும் ரசித்தாள். பிறகு உரிய பாடலை மனனம் செய்யும் திடத்துடன் இரண்டு முறை புத்தகத்தைப் பார்த்துப் படித்தாள். உரக்கப் படித்த பின்னர் புத்தகத்தை மூடி வைத்து விட்டு மன திற்குள் பாடல்வரிகளைச் சொல்லிப் பார்த்தாள். திடு மாற்றம் கண்டது. அடுத்த திருப்பத்தில் சரியாகவே அமைந்து விட்டது உள்ளுரச் சந்தோஷம். ஒரு மிடறு குளிர் நீர் அருந்தி விட்டு எழுந்தாள். கடற்கரைநாடிப் புறப்பட்டு கொண்டிருந்த இளம் ஜோடிகளை- இளைய இணைகளை அவள் ஆவல் மீதுாரப் பார்த்தாள். ஞாயிற்றுக்கிழமை யென்ருல் ஒப்பனையில் கூட ஒரு மாற்றம் பிறந்து விடும் போலிருக்கிறது. சினிமா விளம்பரத் தள்ளு வண்டி ஒன்று குறுக்கே சென்றது. மக்கள் திலகமும் நடிகர் திலகமும் சேர்ந்து தடித்த படத்தின் விளம்பர வண்டி அது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/26&oldid=786597" இலிருந்து மீள்விக்கப்பட்டது