பக்கம்:நித்தியமல்லி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26


அதையடுத்து ஒரிரு இளைஞர்கள் தன்னந்தனியாகச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களைக் கண்டதும், அவளுக்கு உதயணனின் நினைவு நெஞ்சில் ஊறியது. அந் நினைவின் தடத்தில் அவள் அவனைச் சந்தித்த நிகழ்ச்சியை எண்ணினுள்: அவன் அவள் பால் ஆதரவு காட்டிய போக்கை எண்ணி ஞள்; தனக்குத் தானே புன்னகை செய்து கொண் டாள். அதே சமயம், உதயணன் காலேயில் மாறுமுகம் காட்டி மறைந்த நினைவின் நிழலில் அவளது வதனமும் சஞ்சலம் அடைந்து மாற்றம் அடைந்தது. அப்போது: "சுடர்' என்ற குரல் ஒலி கேட்டது. காரொன்று வந்தது நின்றது. அங்கு அவளது தோழி மல்லிகா பதட்டம் பூண்டு காரிலிருந்து இறங்கிளுள், மிஸ்டர் உதயணன் இருக்கிருரல்லவா? அவரது தகப்பனர் திடுப்பென்று நோய்வாய்ப் பட்டுக் கிடக் கிருர், ஜெனரல் ஆஸ்பத்திரியில். உதயணனின் அப்பா ஆனந்தரங்கம் அவர்கள் உன் அம்மாவைப் பார்க்க விரும்புகிருராம். நீயும் உன் அம்மாவும் உடனடியாக இப்போதே புறப்படவேண்டும். சுடர்' என்ருள். மல்லிகா. . . - - 'உதயணனின் தகப்பனரா அந்த ஆனந்தரங்கம்?" என்ற ஒரே கேள்வி தமிழ்ச் சுடரைச் சுற்றி வளைத்தது. விஷயத்தை அன்னையிடம் சொன்னுள். மரகதத்தம்மை அவளுடன் தொடர மறுத்துவிட்டாள். கடைசில் தமிழ்ச்சுடர் மட்டுமே தன் தோழியுடன் புறப்பட வேண்டியவள் ஆளுள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/27&oldid=1277297" இலிருந்து மீள்விக்கப்பட்டது