பக்கம்:நித்தியமல்லி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30


பட்டிருந்த கோலத்தைத் திருத்த மனமிழந்து அவன் தந்தையை அழைத்தான். ஆனந்தரங்கம் ஆடவில்லை; அசையவில்லை. கண்கள் மூடியவை மூடியபடியே இருந்தன. மார்பில் மட்டும் லேசாகத் துடிப்பு இயங்கிக் கொண்டிருந்தது. போர்த்தில் யிருந்த போர்வை மட்டும் எம்பி எம்பி இறங்கிக் கொண் டிருந்தது. உதயணன் செருமினன். தமிழ்ச்சுடர் அவனை அண்டினள். உணர்ச்சிச் சுழிப் பின் கம்பீரமான துடிப்புடன் அவன் கரங்களைப் பற்றினுள். அழாதீர்கள், தெய்வம் நம்மைச் சோதிச் சிடாதுங்க,' என்று உரிமையின் பாந்தவ்யத்தோடு அவள் ஆறுதல் சொன்னுள். அவளது அச் சொற்கள் அவன் மனத்தை நெகிழச் செய்திருக்க வேண்டும்!-அவன் சிறு குழந்தைபோல விம்மிவிம்மி அழுதான். தமிழ்ச்சுடருக்கு நெஞ்சு வெடித்துவிடும் போலி ருந்தது. . அவன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். பிறகு. முகத்தை டவலினல் துடைத்துக் கொண்டான்; மருந்து வைத்திருக்கும் அலமாரியிலிருந்து மருந்துச் சீசாவை எடுத்து அவுன்ஸ் கிளாசில் அளவு பார்த்து மருந்து ஊற்றினன். பிறகு ப டு க் கை யை நெருங்கினன். 'அப்பா!' என்று சற்று பலமான குரலில் கூப்பிட்டான். அதைத் தொடர்ந்து அவரது மேனிய்ைத் தொட்டு உசுப் பினன்.

  • . . . அப்போது, @l-ിലേt് s: கால் வந்திருப்பதாக மல்லிகா தெரிவித்து, ரிஸிவரை அவனிடம் நீட்டினள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/31&oldid=1277300" இலிருந்து மீள்விக்கப்பட்டது