பக்கம்:நித்தியமல்லி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33


டார். மூச்சு மட்டும்தான் லேசாக வந்துகொண்டி. ருந்தது. . அப்பா! அப்பா!' என்று அலறிஞன், உதயணன், பிறகு, தமிழ்ச்சுடரின் சார்பில் பார்வையினைத். திருப்பினன். அலமாரியிலிருந்த தந்தப் பெட்டி ஒன்றை எடுத்து அவளிடம் சமர்ப்பித்தான்.

  • அப்பா உன் அம்மாவினிடம் கொடுக்கச் சொன் ளுங்க. உங்க அம்மாகிட்டே இதைக் கொடுத்திடு!” என்று விம்மினன். உதயணன்.

தமிழ்ச்சுடர் அவனைப் பார்க்கத் தெம்பிழந்து, மெளனக் கோலத்துடன் அதை வாங்கிக் கையில் வைத். துக்கொண்டாள். அவளது பூங்கரங்கள் புயலிடைப் பூவாக அல்லாடின. அப்போது: உதயணனின் தாய் செங்கமலவல்லியுடன் தமிழ்ச் சுடரின் அன்னை மரகதத்தம்மையும் வந்து நின்ருர்கள். 5. பொட்டுத் தழும்பு அந்தத் தந்தப் பெட்டியை மார்புடன் சாய்த்துக் கொண்டு நின்ற தமிழ்ச்சுடர், அப்பெட்டியின் உறவு. மேனியையும் அப்பெட்டியின் நினைவு இதயத்தையும் உறுத்திக் கொண்டேயிருந்த நிலையுடன், விதியை ஆராயும் மாணவிபோல அவள் அந்த அழகிய பெட்டி யின் உள்ளே அடங்கியிருந்த பொருளைப் பற்றிய சிந்த, னையில் ஈடுபட்டு லயித்து, தடுமாறித் தத்தளித்தபோது. தான், அங்கு அன்பின் ஒரு காட்சிபோல அவள் செங்கமல வல்லியையும் மரகதத்தம்மையையும் கண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/34&oldid=1277303" இலிருந்து மீள்விக்கப்பட்டது