பக்கம்:நித்தியமல்லி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


விரைந்தான் உதயணன். பார்வையாளர் நேரம், அதன் முடிவுக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போது உதயணனின் தகப்பனரான ஆனந்த, ரங்கம் எதிர்பாராத விதமாக லேசாகக் கண்களைத். திறந்து அரைப்பார்வை பார்ப்பதைக் கண்டான். அவன் உடனே அப்பார்வையில் ஒரு திசைமாற்றம் ஏற்பட்டதையும் அவன் கவனிக்காமல் இல்லை. அம்மாறு: தலில் ஏதோ ஒரு பரிவின் பாசமும், ஆற்ருமையின் ஆதர்சமும் ஆதங்கத்தின் நெட்டுயிர்ப்பும் கோடிட்டுப் பேசக் கண்டான். காலையில் நிகழ்ந்த விழாவைப் பற்றியும் அவ்விழாவில் தன் தந்தையின் தனிப்பட்ட சொந்த வாழ்க்கையின் கெளரவத்துக்குப் பங்கம் விளைந்து விட்டதாக மனம் நொந்த வினையையும் அவன் கருத்தில் சீர்தூக்கிப் பார்க்கவே செய்தான். வாழ்க்கை சிலருக்கு எண்ணிய பிரகாரமே அமைந்து, விடுகிறது. அவர்கள் கொடுத்துவைத்தவர்கள். அதனல் தான் வாழ்க்கை எனும் இன்பச் சுரங்கத்திலிருந்து அவர் கள் கணுக்களையும் களிப்புக்களையும் எடுத்துக்கொள்கிருர் கள். இவ்வகைப் பிரிவினின்றும் விலகியோ விலக்கப் பட்டோ வேறு சிலர் இருக்கிருர்கள். இவர்களுக்கு, வாழ்க்கை அமைவது கிடையாது. ஆனல் இவர் களாகவே வாழ்க்கையை அமைத்துக்கொள்கிருர்கள். அவ்வாறு அமைத்துக்கொண்ட வாழ்க்கையில் அவர்கள் என்னதான் மகிழ்வு நிலைகளைச் சுவீகரித்துக்கொள்ள பிரயத்தனப் பட்டாலும்-பகீரதப் பிரயத்தனப்பட்டா லுங்கூட அவர்களால் அவர்கள் எண்ணியபடி ஆனந்தங் களே-ஆபிலாஷைகளை - ஆர்வங்களே தன்மயமாக்கிக் கொள்ள முடிவதில்லை. ஆகவேதான், அவர்கட்கு. வாழ்க்கையில் ஒரு குறை இன்னதென்று பகுத்துக் கூறமுடியாத உணர்வுடன், அக்குறை எங்கிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/37&oldid=1277306" இலிருந்து மீள்விக்கப்பட்டது