பக்கம்:நித்தியமல்லி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37


புறப்பட்டு வருத்துகிறது என்று உறுதியிட்டுக் கண்டு கொள்ள முடியாத மாயத் தாகத்துடன் ஊடுருவி வருகிறது. அவ்வேதனையே அவர்களுக்கு வேள்வித் தீயாக உருமாறி அவர்களை வாட்டி வதைக்கிறது. கண்ட கனவு கடைசி வரையிலும் பலிக்கவில்லையே எனும் உள்ளக் குறைபாடு அவர்களுக்கு விதியாகிறது: வினையாகிறது; விளையாட்டாகவும் ஆகிவிடுகிறது: ஆக, இப்படிப்பட்ட இருவேறு துருவத் துடிப்பின் நிறைவுநிறைவின்மை ஆகிய நிர்ணயங்களுடன்தான் அவரவர் களுக்கு வாழ்க்கை அமைந்து விடுகிறது. வாழ்க்கை அவர்கள் வரை தவிர்க்க முடியாத ஒரு விபத்து ஆகி விடுகிறது. வாழ்கிரு.ர்கள்! அப்படியே வாழ்ந்து கொண்டே இருக்கிரு.ர்கள்!... எதையோ நினைத்துக்கொண்ட உதயணன் வேது எதையோ நினைத்துக்கொண்டான். அவன் மீண்டும் திருஷ்டியை மீட்டிய தருணத்தில் ஆனந்தரங்கம் எழுந்து திண்டில் சாய்ந்து கொண்டிருந்ததைக் கண் டான். அப்பாவின் நோக்கு மரகதத் தம்மையையே விழிபிதுங்க, விழிபிதுங்கப் பார்வை செலுத்தியவாறு: இருந்த நுட்பம் அவனுக்குப் பிடிபடவே செய்தது. "குமாரி தமிழ்ச்சுடருக்கு என் பேரில் நிரம்பவும் கோபமாகயிருக்கும்! அதற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது. அது எங்கள் குடும்ப விவகாரம். ஆனலும், தமிழ்ச்சுடர் மீது எனக்குத் துளியும் கோபமில்லை. என் கையால் 'அது' பரிசை வாங்க மறுத்தால் பரவாயில்லை. என் மனமார நான் வாழ்த்தும் வாழ்த்தை அது நிச்ச யம் ஏற்க மறுக்கமுடியாதல்லவா? ஆகவே, அதை" மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். அது சகல செளபாக் கியங்களுடன் சிறப்புற்று விளங்கவேண்டு மென்பதே என் ஆசியாகும்!-இம்மாதிரி இலக்கியப் பரிசுகளை 'ஆது' நி. 3-488

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/38&oldid=1277307" இலிருந்து மீள்விக்கப்பட்டது