பக்கம்:நித்தியமல்லி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர் அறிமுகம் பெண் இல்லையேல், வாழ்க்கை இல்லை. வாழ்க்கை இல்லையேல், கதை இல்லை. ஆம்; பெண்மையின் வாழ்க்கையும், வாழ்க்கையின் கதையும் கூட்டாக உறவு கொண்டு ஒர் உண்மையை நடத்திச் செல்லும் போதுதான், ஆண்மையின் விதியும் விதியின் தத்து வமும் இறைமைப் பண்பாட்டின் பின்புல்த்தோடு இயங்கி இயக்கப்பட்டு, அதன் இனிய விளைபலகை, இலக்கிய நயம் செறிந்தி-யதார்த்தச் சித்தார்தம் நிர்ம்பிய் நல்லதொரு குடும்பக்கதை கிடைக்கிறது. அத்தகைய அழகான-அன்பான-இயல்பான கதை யொன்று எனக்கும் கிடைத்தது. அது ஒரு பெண்மையின் சரிதம், பெண்மைச் சக்திக்கு ஆரம்பமும் முடிவுமாகக் கொண்ட அப் பெண்மைச் சக்தியின் எதிரெதிர்ப் பண்பாடு: களின் மோதல்களை விளைவித்த நடப்புக் கதை அல்லவா அது! ... • - அந்த நடப்புக்கு ஒரு நாயகி வேண்டுமே! அவள்தான், குமாரி தமிழ்ச்சுடர். தமிழை மறந்து விடப் போகிறீர்கள்!-ஏனென்ருல் அவள் கோபித்துக் கொள்ளு, வாள். முந்தித்தவம் கிடந்து முந்நூறுநாள் சுமந்து ஈன்ற தன் அன்னையான மரகதத்தம்மாள் தமிழை மறந்து சுடர் என்று தன்னை அழைப்பதைக் கூட அனுமதிக்காத கன்னி' அவள்! . - அவளை-தமிழ்ச்சுடரை வாழவைக்க இரண்டு குடும்பங்" களின் பின்னணிக்கதை முயற்சி செய்கிறது. ஒரு நல்ல ஆரம்பமும் ஒரு நல்ல முடிவும் அவளுக்குக் கிடைப்பதற்குள்" எத்தனே எத்தனை பிரச்னைகள் குறுக்கிட்டுவிடுகின்றன! வாழ்க்கை என்பதே ஒரு பிரச்னதான்! அது ஒரு. போராட்டமும் கூட!...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/4&oldid=786612" இலிருந்து மீள்விக்கப்பட்டது