பக்கம்:நித்தியமல்லி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39


கொண்டிருந்த செங்கமலவல்லியின் பரந்த மனத்தை அவள் எவ்வளவோ உள்ளூரப் பாராட்டவே செய்தாள், - அப்போது. 'தம்பி, அப்பா ஏதோ சொல்லாத் துடிக்கிருங்க. போய்ப் பார் தம்பி!' என்ருள் உதயணின் அன்னை. உதயணன் விரைந்து சென்ருன். திண்டில் சாய்ந்திருந்த ஆனந்தரங்கம் தன் மகனிடம் சமிக்ஞை காட்டினர். பிறகு அடித் தொண் டையில்பேசினர். வார்த்தைகள் தீனமாகவும் குழறுபடி .யாகவும் வெளி வந்தன. அவர் பேச்சின் உட்கிடை அவனுக்குப் புரியவே செய்தது. மரகத் தம் ைமயை அருகில் அழைக்கும்படி அவர் ஆணையிட்டார். இந்த மட்டில் அவனுக்குச் செய்தி தெளிவாகப் புரிந்து விட்டது. அவ்விஷயத்தை அவன் மரகதத்தம்மையிடம் கூறினன். மரகதத்தம்மை காற்றில் அலைந்தகற்றை இழைகளை லாகவமாக ஒதுக்கிவிட்டவளாக, மெல்ல நடந்தாள். அவளுடன் கூட, தமிழ்ச்சுடரும் சென்ருள். தந்தப் பெட்டி நெஞ்சோடு அணைந்திருந்தது. - அப்பொழுது, நி ன் ற இடத்திலேயேநின்று விட்டாள் செங்கமலவன் வி. தாயை நோக்கி வந்து விட்டான் உதயணன். இந்த இடப்பரிவர்த்தனை-இடமாறுதல் தமிழ் சுடரின் உள்ளத்தை என்னவோ செய்தது. ஆனந்தரங்கம் இன்னும் தாராளமாக உள்ளே தள்ளி, தலையணைகளை பின்னுக்கு இழுத்துக் கொண்டு வசமாக உட்கார்ந்தார். மரகதத்தம்மையையும் தமிழ்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/40&oldid=1277309" இலிருந்து மீள்விக்கப்பட்டது