பக்கம்:நித்தியமல்லி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44


தமிழ்ச்சுடர் இதயத் துடிப்பை சமனப்படுத்தி முயன்ற நிலையுடன், சற்றே கீழ்வசமாக நடந்து, தாழ் வாரக் கைப்பிடிச் சுவரை அடைந்தாள். எதிர்வாடை யில் வாடைக் காற்று ஜன நெரிசலைக் கடந்து மிதந்து வந்தது. ஒடும் மேகங்கள் வான்பிறையுடன் கண் பொத்தி விளையாடிக் கொண்டிருந்தன. அந்த இயற்கை வின் எழிலை அனுபவிக்க ஜனங்களின் இயந்திர மனங் களுக்கு மனம் ஏது? அவரவர்கள் சென்ட்ரல் ஸ்டேஷ ளிைலும் பஸ் ஸ்டாப்களிலும் அயர்வுடன் ஒற்றைக்கால் தவம் செய்துகொண்டிருந்தனர். ரெயில் நிலையத்தில் தாயின் மணிக்கொடி பட்டொளி பரப்பிப் பறந்து கொண்டிருந்தது, தமிழ்ச்சுடரின் பார்வை இப்போது டாக்டர் ரங்காச் சாரியின் சிலைமீது படர்ந்தது. மனிதப் பிறவிகளுக்குக் கண்கண்ட தெய்வமாக விளங்கிய அந்த டாக்டரைப் பற்றிய இனிய நினைப்புடன், சற்றுமுன் உதயனின் தந்தைக்கு ஊசி மருந்தைச் செலுத்திய அந்தப் பெரிய டாக்டரின் ஞாபகமும் தொடர்ந்தெழுந்தது. 岑 崇 崇 ” மருந்துக் கலவையின் பொதுவான நெடி பரவலாகக் கமழ்ந்துகொண்டே யிருந்தது. தீனமான விம்மலின் குரலொன்று எங்கிருந்தோ அறப்பட்டது. . தமிழ்ச்சுடருக்கு மனம் துடித்தது. ஒருவேளை இக் குரல் பூரீமான் ஆனந்தரங்கத்தினுடையதாக இருக் குமோ? என்று ஒரு பயம் கவ்விக் கொண்டது. வார்டு டாக்டர்களும் மேட்ரன்களும் நர்ஸ்களுமாக இடைகழிப் பாதையில் வந்துகொண்டும் போய்க்கொண் இம் இருந்தார்கள். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/45&oldid=1277313" இலிருந்து மீள்விக்கப்பட்டது