பக்கம்:நித்தியமல்லி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47


ஸ்பரிசிப்பதொட்டுப் பற்றினன். சந்தடியிழந்த சூழல் சந்தடி பெற்ற போதுதான், அவன் அவளது கரம் பற்றி யதையும், அவள் தன் கரங்களை விடுவித்துக் கொள்ள முயலாமல் மெய்மறந்து நிற்பதையும் உணர்ந்து கொள்ள முடிந்தது அவனல். உடனேயே, எக்ஸ்யூஸ் மி, ப்ளீஸ்' என்று தடுமாற்றத்தோடு மென் குரலெடுத் துச் சொன்னுன் அவன். அதற்கு அவள் இணக்கத்துடன் மறுபடியும் மெளனமாகப் புன்னகைப் பூவைத் தூவி நின்ருள். இத்தகைய மோன நிலையின் ரகசிய நடவடிக்கை ஆரம்பமாகி, நடந்து, முடிந்தபோது, அவ்விடத்தில் மரகதத்தம் மை பிரசன்னமாளுள். அன்னையைக் கண்ட சடுதியில், குற்றமனப்பான்மை மாருத மன அதிர்வுட. னேயே, "அம்மா!' என்ருள் தமிழ்ச்சுடர். 'அம்மா சுடர்! இனிமே இவங்க அப்பாவுக்கு, யாதொரு பயமும் இல்லை. கடவுள் காப்பாற்றி விட். டாரம்மா!' என்று தெளிந்த குரலில் அறிவித்தாள் மரகதத்தம்மை. செவ்வரி படர்ந்த நெற்றித் திட்டைத் தடவிய வண்ணம் குனிந்த தலையுடன் ஒதுங்கி நின்ற உதயணன் தலையை நிமிர்த்தி, எல்லாம் உங்களைப் போலொத்தநல்ல உள்ளங்களோட அனுக்கிரகம்தானம்மா! உங்க. அன்பு பெரிசு. ரொம்ப நன்றிங்க' என்ருன், உணர்ச்சி வசப்பட்டுப் பேசினன். - 'தெய்வத்தின் முன்னே மனிதர்களாகிய நாம் ரெசம்பவும் சாமான்யமானவர்களே!. தம்பி. நீங்க. ரொம்பத் துடிச்சிட்டீங்களாம் இந்த இரண்டு முனு: தாளாக அக்கா சொன்னங்க!...” என்ருள் மரகதத் தம்மை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/48&oldid=1277316" இலிருந்து மீள்விக்கப்பட்டது