பக்கம்:நித்தியமல்லி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49


அணைத்திருந்த தந்தப் பெட்டி, நியான் விளக்கில் பள பளத்தது. - - 'உம்' கொட்டியவாறு பின் தொடர்ந்தாள் தமிழ்ச் சுடர். அப்போது அவளது கன்னி மனத்தில் அந்தத். தந்தப்பெட்டி ஒரு மாயப் புதிராகத் தோன்றி விளையாடிக் கொண்டிருந்தது. 'அம்மாவாகச் சொல். லாமல் இருக்கையில், நான் அவர்களிடம் அதைப்பற்றிக் கேட்பது அவ்வளவு உசிதமாகாதல்லவா?’ என்று அவள் நெஞ்சம் பரதவித்துக் கொண்டிருந்தது. மூடிக்கிடந்த வாசல்புறக் கதவுகள் திறந்து மூடிக். கொண்டன. ஜனநெரிசலைக் கடந்து வால்டாக்ஸ் திருப்பத்தில்: தாயும் மகளும் போய் நின்றபோது, அவர்களை ஏற்றிச் செல்ல வாடகைக் காரொன்று சம்மதம் தெரிவித்தது. இராக் காலங்களில் சென்னை நகரத்தின் ராஜ: கம்பீரத்துக்கென்று ஒரு ரகசியப் பயம் வந்து விடுமோ? 7. பரிசு-வைர நெக்லஸ் ! பிரபல ஹாலிவுட் நட்சத்திரம் ஸோஃபியா லாரென் தன்னுடைய மேனி அழகின் ரகசியத்தைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது எடுத்துக் காட்டியிருந்த். சில விவரங்கள் தமிழ்ச்சுடருக்கு அத்துணை ஆர்வம் ஊட்டவில்லை யென்ருலும், புகழ்பெற்ற-உலகப் புகழ். பெற்ற நட்சத்திரம் என்னதான் தன் மேனி எழில் அந்தரங்கத்தைப் பற்றிக் கூறுகிருள் என்பதை அறிந்து. கொள்ளும் ஒரு துடிப்பு அவளுக்கு இயல்பாகவே உந்தவே, படித்துக் கொண்டிருந்த பரீட்சைப் பாடங். களினின்றும் சித்தத்தைத் திருப்பி விடலாளுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/50&oldid=1277318" இலிருந்து மீள்விக்கப்பட்டது