பக்கம்:நித்தியமல்லி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50


லோஃபியா லாரென் சொல்லியிருந்தார்: அவர் ஆகார கட்டுத்திட்டம் எதனையுமே பின்பற்று வதில்லையாம். வீட்டிலே அங்குமிங்கும் நடமாடுவதைத் தவிர, வேறு பிரத்யேகமான தேகப் பயிற்சி எதுவும் செய்வதில்லையாம். முகவசீகரத்துக்காக பழத்துண்டங் களைச் சில வேளைகளில் பூசிக்கொண்டாராம்; ஆனல் அவற்றைக் கடைசியில் அவர் தின்றே தீர்த்து விட்டாராம். தொடர்ந்து, 'தாயாகும் கட்டத்தில்தான் ஒரு பெண் மிகவும் அழகாக இருக்கிருள். முழுமை உணர்வு தான் பெண்களுக்கு அழகைக் கூட்டுகிறது என்றும் எடுத் துக் காட்டியிருந்தாள் அந்நடிகை. குறிப்பாக இச்செய்தி தமிழ்ச்சுடருக்கு இதமளித் தது; தெரிந்த விவரமே ஆலுைம், மீண்டும், மீண்டும் அவ்விஷயத்தைப் பிறர் சொல்லக் கேட்பதிலே மிகுந்த தோர் ஆர்வம் கிளைவிடுவது வழக்கம்தான் -இப்படிப் பட்ட முறையில்தான் தமிழ்ச்சுடர் ஆர்வம் காட்டிள்ை. அந்த ஆர்வத்தின் பிடிப்பு அவளே வனப்பு வாய்ந்த தனது வருங்காலத்தின் தோரணவாயிலில் கொண்டு போய் நிறுத்தியது. ஜெனரல் ஆஸ்பத்திரியில் உதயணன் தன்பால் கூறிய ஆதரவு வார்த்தைகளை மீளவும் சிந்தித் துப் பார்த்து, அச்சிந்தனையில் மதமதப்புடன் ஹாலிவுட் நடிகையின் கடைசிக் குறிப்பையும் எடைபோட்டுப் பார்க்கையில், அவளுக்கு தானும் உதயணனும் மனக் கோலம் தாங்கி நிற்கும் ஒரு கனவுக் காட்சி நிழலாட, அந்நிழலிலே, தாயாகும் நிலையில்தான் ஒரு பெண் மிக வும் அழகுடன் திகழ்கிருள்' என்ற குறிப்பு அவளுள் அந்த ரங்க பூர்வமான ஆர்வத்தை உண்டுபண்ணி வேடிக்கை பார்த்தது; வேடிக்கை காட்டியது. சில விடிைகள் வரைக் கும் அவள் ஏதோ ஒர் இன்ப வேதனையில் ஊசலாடிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/51&oldid=1277319" இலிருந்து மீள்விக்கப்பட்டது