பக்கம்:நித்தியமல்லி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54


1 ஆமம்மா. நெக்லஸ் ரொம்ப ரொம்ப அழகாக இருக்குதம்மா!...நான் அடைந்த தோல்வி மட்டும் இவ்: னவு அழகாக இருக்கலயே, சுடர்' என்று நிறுத்தினள் மரகதத் தம்மை. இப்பேச்சு தமிழ்ச்சுடரின் இதயத்தில் சுருக்கென்று தைத்தது. இதற்குப் பதில் ஏதும் சொல்லாமல் சும்மா இருந்தாள். அன்னே அடைந்த காதல் தோல்விக்கு மகள் என்ன பதின் சொல்லுவாள், பாவம்! "சுடர், இதைப்போலவே உன் கல்யாணத்துக்கு ஒரு வைர அட்டிகை வாங்கி போட்டு விடுறேன் அம்மா!' என்றும் தகவல் தெரிவித்தாள் அம்மை. இப்போது மேலும் சுடரின் நெஞ்சம் குழம்பியது. "அப்படியென் ருல், ஆனந்தரங்கத்தின் பரிசை அம்மா ஏற்கமாட்டார்களென்று அர்த்தமா?' என்ருெரு புதிய ஐயப்பாடும் கிளர்ந்தெழுந்தது. ரத்தம் பூராவும் மண்டை உச்சிக்கு ஏறிவிட்டமாதிரி தலையில் நோவு எடுத்தது. என்னம்மா சரிதானே!" 'அட்டிகைக் கென்னம்மா இப்போதே அவசரம்? உங்கள் இஷ்டப்படி பிற்பாடு செய்து அல்லது வாங்கிப் கோடுங்களேன்!' வைரங்களுக்கு மத்தியில் படுத்து எழுந்திருக்கும் சீமான் மகன் உதயணனின் இனிய நல் நினைவு அவளே ஆட்கொண்டது. அதேவேளையில் இனம் ஜரியாத பயமும் தவிப்பும் கலக்கமும் கூடவே எழ லாயின. சுடர் உதயணன் உன் பேரிலே மிகவும் பிரியம் கொண்டுதான் இருக்காரம்மா! நீ சொன்னது முற்றிலும் மெய்தானக்கும்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/55&oldid=1277322" இலிருந்து மீள்விக்கப்பட்டது